»   »  நயன்தாராவா அனுஷ்காவா... தடுமாறும் அஜீத் பட இயக்குநர்?

நயன்தாராவா அனுஷ்காவா... தடுமாறும் அஜீத் பட இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல 57 என்று அழைக்கப்பட்டு வரும் அஜீத்தின் அடுத்த பட வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்துவிட்டன. படப்பிடிப்புக்கும் தேதி குறித்துவிட்டார்கள்.

ஆனால் ஒரு விஷயத்தில்தான் இன்னும் முடிவுக்கு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஹீரோயின்.

ரித்திகா

ரித்திகா

இறுதிச் சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கை நாயகியாக்கப் போவதாக முதலில் பேச்சு இருந்தது. ஆனால் அவரோ இந்தப் படத்தில் நடிப்பது குறித்து மீடியாவிடம் வாயே திறக்கவில்லை.

நயன்தாரா அல்லது அனுஷ்கா

நயன்தாரா அல்லது அனுஷ்கா

இந்த நிலையில், பிரதான நாயகி வேடத்துக்கு சீனியர் நடிகைகள் அனுஷ்கா அல்லது நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய ஆலோசித்து வருகின்றனர்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவும் ரேசில் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஏற்கெனவே அஜீத்துடன் சமீபத்தில் அவர் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார்.

சிவா

சிவா

சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். அஜீத்தை வைத்து அவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

English summary
The Ajith 57 director Siva is still not taking any decision on lead lady of the movie. Sources say that Nayanthara and Anushka are in consideration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil