Darbar film: நயன் சென்ட்டிமென்ட்... ரஜினி படம் ஷூட்டிங்கில் பிரச்சனை இல்லையே!
Recommended Video
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு தர வேண்டிய சம்பளம் வரவில்லை என்று மும்பை படப்பிடிப்பை விட்டு சென்னை வந்துட்டார் என்று தகவல்கள்.
லைக்கா நிறுவனம் புரடக்ஷனுக்கு தர வேண்டிய பணத்தை தரலை.. அதனால படப்பிடிப்பு பாதியில் நின்றதுன்னு ஒரு தரப்பு சொல்றாங்க.
ரெண்டுமே இல்லையாம் படப்பிடிப்பு வெகு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது என்று படக்குழு உண்மையை சொல்லி உள்ளது.

ரஜினிகாந்த் தர்பார்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் வெகு ஜோராக பரபரப்பா நடந்துகிட்டு இருக்குதாம். ரஜினியின் உற்சாகம் சொல்லி மாளாது என்கிற அளவில் வேற லெவலில் இருக்குதாம். அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் பண்ணப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தனது முழு கவனத்தையும் தர்பாரில் காண்பித்து அசர வைக்கிறார் என்கிறார்கள்.

என்ன கதை
அடுத்து தான் என்ன படம் பண்ண போகிறோம் என்பதை பற்றி எல்லாம் பெரிய நடிகர்கள் வேறொரு செட்டில் பேசுவதில்லை. வழக்கத்தை ஆரம்பிச்சு வச்ச ரஜினியே அதை செய்வாரா. மூச் அடுத்த படத்தை பத்தி இதுவரைக்கும் அவர் செட்டில் வாயைத் திறக்கவே இல்லை என்கிறார்கள். மும்பை, மலேசியா ஷூட்டிங் என்றாலே ரஜினிக்கு தனி குஷி வந்திருமாம். இரவில் தனியாக ஜாலி வாக் போயிட்டு வர்றார்.

என்னதான் அது?
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா தர்பார் படத்துக்கு சென்ட்டிமென்ட் ஒண்ணும் வச்சு இருக்கார். அதன் படி படப்பிடிப்புக்கு தயாராகி வழியில் வந்தவர் கேட்ட கார் வராமல் வேற கார் வந்ததால் ஏறலை. நான் வெள்ளை டொயோட்டா கார்தான் கேட்டேன்.. அதை எடுத்து வாங்கன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருக்கார்.

கேட்ட கார் வந்தது
என்னவோ அவரோட சென்ட்டிமென்ட்..இந்த மாதிரி விஷயத்தில் சினிமாக்காரர்கள் ஒன்றுமே தயக்கம் காட்டாமல் கேட்டதை செய்து கொடுத்துடுவாங்க. அதுவும் நயன்தாரா கேட்ட கார் வராமல் போனால் எப்படி.உடனடியாக அவர் கேட்ட கார் வரவழைக்கப்பட்டு, அதில் ஏறிப் போய்த்தான் நடிச்சு இருக்கார் நம்ம நயன்தாரா.


Click it and Unblock the Notifications











