ஐசரி கணேசன் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுத, லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கப்போகிறாரா?
சென்னை : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா', தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகாகிய நயன்தாரா,அதற்கு பிறகு சந்திரமுகியில் நடித்து மிக முக்கிய கதாநாயகியாக உருவாக தொடங்கினார்.நயன்தாராவின் முதல் படம் மனசின்கரே எனும் மளையாள படம் ஆகும் .
நயன்தாரா தொடர்ந்து தமிழ் ,தெழுங்கு, மளையாம் என தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக உயர்ந்தார் . பல படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வந்த நயன்தாரா அஜித்தின் பில்லா படம் மூலம் ஆக்சன் கதாநாயகி ஆனார். தற்போது தமிழில் கடைசியாக பிகில் படத்தில் நடித்திருந்தார். இவர் ஹீரோயின் சென்ரிக் திரைப்படங்களான அறம் ,கோகோ போன்ற படங்களில் நடித்தது மாபெரும் வெற்றி அடைந்தது . தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி படமான தர்பாரிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் ,தற்போது நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ரௌடி பிக்சர்ஸ்' என்று பெயர் வைத்துள்ளார் . நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார் மிலிந் ரவ் . இவர் இதற்கு முன் அவள் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் .
இதை தொடர்ந்து நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி எழுத்தில் உருவாக போகும் ஒரு படத்தில் நடிக்க போவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசன் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது .
ஆர்.ஜே.பாலாஜி கடைசியாக எல்.கே.ஜி படத்திற்கு கதை எழுதி நடித்து இருந்தார்.அந்த படம் வணிக ரீதியான வெற்றியை பெற்றது . அதை தொடர்ந்து ஜசரி கணேசன் தற்போது ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி வரும் படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'மூக்குத்தி அம்மன்' என்று தலைப்பு வைக்கபட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, படத்தின் ப்ரீ புரோடக்ஷன் வேலைகள் தற்போது தான் போய் கொண்டு இருப்பதால் 'மூக்குத்தி அம்மன் ' என்ற தலைப்பு எந்த அளவுக்கு உண்மை என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாலாஜி என்றாலே நக்கல் நய்யாண்டி கிண்டல் கேலி தான். அவரின் அந்த வித்யாசமான பேச்சிற்கு ரசிகர் கூட்டம் ஒன்று தனியாக உள்ளது. அவர் எது சொன்னாலும் அவர்கள் சிரிப்பார்கள். இந்த படத்தில் டயலாக் எப்படி இருக்கபோகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











