இரட்டை குழந்தை… சீரக சம்பா பிரியாணி விருந்து… நயனுக்கு விக்கி கொடுத்த அசத்தல் ட்ரீட்

சென்னை: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் ட்வீட் செய்திருந்தார்.

அதன்பின்னர் வாடகைத்தாய் பிரச்சினையில் சிக்கிய நயன் - விக்கி தம்பதி தற்போது அதிலிருந்து மீண்டு வந்து அட்டகாசமான பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

'தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வரும் நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், டோலிவுட்டிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன்தாரா. இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஜூன் மாதம் நயனும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு ஜலியாக ஹனிமூன் சென்று வந்தனர்.

வாடகைத்தாய் பிரச்சினை

வாடகைத்தாய் பிரச்சினை

இதனைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் ட்வீட் செய்திருந்தார். இருவருக்கும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரியவந்தது. இருவரும் அதற்கான ஆதராங்களை விக்னேஷ் - நயன் சமர்பித்தனர். அதன்படி, அவர்களின் பதிவுத் திருமணம் மார்ச் மாதம் நடைபெற்றதும் உறுதியானது.

எல்லாமே சூப்பர் ப்ளான்

எல்லாமே சூப்பர் ப்ளான்

சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா இருவரும் சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்தனர். அப்போதே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுத்த பெண்ணும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடித்து தான் குழந்தை பெற்றுள்ளனர் என்பதால் இந்த சர்ச்சை அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனை கொண்டாடும் விதமாக நயனுக்கு சூப்பரான பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் விக்கி.

சீரக சம்பா பிரியாணி ட்ரீட்

சீரக சம்பா பிரியாணி ட்ரீட்

அடிக்கடி நயனுக்கு தான் சமைத்துக்கொடுக்கும் உணவுகளுடன் போட்டோக்களை ஷேர் செய்து வந்த விக்கி, இந்த முறை ரெஸ்டாரண்ட் கூட்டிச் சென்று விருந்து கொடுத்துள்ளார். சென்னை லயோலா கல்லூரி எதிரில் உள்ள கேஎம்எஸ் ரெஸ்டாரண்டின் சீரக சம்பா பிரியாணி தான் நயனுக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால், நயனை ரெஸ்டாரண்டுக்கே நேரில் கூட்டிச் சென்ற விக்கி, அவருக்கு சீரக சம்பா பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அப்போது கேஎம்எஸ் ரெஸ்டாரண்ட் ஊழியர்களுடன் விக்கியும் நயனும் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X