Nayan-Vicky: நயன்தாராவின் புதிய இயக்குநர்... ஓஹோ! இவரு “பெயரும்” இப்படியா..? சரியா போச்சு போங்க!

சென்னை: நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கும் இந்தத் திரைப்படம் மூலம் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழில் பெரிதாக நயன்தாராவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 மகன்களுடன் மகிழ்ச்சி

மகன்களுடன் மகிழ்ச்சி

விக்னேஷ் சிவனுடன் திருமணம், இரட்டை குழந்தைகள், முதன் முறையாக பாலிவுட் என்ட்ரி என பிஸியாக வலம் வருகிறார் நயன்தாரா. இரு தினங்களுக்கு முன்னர் தங்களது இரட்டை மகன்களின் பெயரை நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்தனர். அதன்படி, அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மகிழ்ச்சியை விக்கியுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார் நயன்.

 நயன்தாரா 75வது படம்

நயன்தாரா 75வது படம்

நயன்தாரா மகன்களின் பெயர் புரியவே இல்லையே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். அதேநேரம் அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடியும் மகிழ்ந்தனர். இந்நிலையில், நயன்தாராவின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன் நடிப்பில் கடைசியாக 'கனெக்ட்' என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது 75வது படம் குறித்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

 இயக்குநர் இவர் தானா?

இயக்குநர் இவர் தானா?

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தேவ், சர்தார், ரன் பேபி ரன் ஆகிய படங்களை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ், முதன்முறையாக நயனுடன் கூட்டணி வைக்கவுள்ளது. இந்தப் படத்தை விக்கி என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவர் நயனின் கணவர் விக்கி இல்லை என்பதும், இந்தப் படம் மூலம் தான் இயக்குநராகவே அறிமுகமாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

ப்ளாக் ஷீப் உள்ளிட்ட யுட்யூப் சேனல்களில் பணியாற்றியுள்ள விக்கி, நயனுக்காக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை ரெடி செய்துள்ளாராம். இதனால் நயன்தாராவும் உடனடியாக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட், சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானுடன் நடித்து வரும் ஜவான் திரைப்படமும் நயனுக்கு தரமான கம்பேக் கொடுக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி

இன்னொரு பக்கம் ஏகே 62 பட வாய்ப்பை தவறவிட்ட விக்னேஷ் சிவனுக்காகவும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் நயன். இந்தப் படத்தில் நயனுக்கு ஜோடியாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட ஒரு விருது விழா நிகழ்ச்சியில் பிரதீப்பும் நயனும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்தப் படம் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X