துரத்தும் தெலுங்கு ஹீரோக்கள்: எஸ்ஸாகும் நயன்தாரா
சென்னை: நயன்தாராவை தங்கள் பக்கம் இழுக்க சில ஆந்திர ஹீரோக்கள் முயற்சி செய்கிறார்களாம்.
நயன்தாரா முதலில் சிம்புவை காதலித்தார். அவர்களின் காதல் முறிந்து போனது. அதையடுத்து ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்து அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார். அதனால் சில காலம் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
என்ன நடந்ததோ திடீர் என்று ஒரு நாள் அவர்கள் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து சென்றுவிட்டனர்.

ஆர்யா
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்தார். அதில் இருந்து நயன்தாரா ஆர்யாவுடன் இணைத்து பேசப்படுகிறார். இந்நிலையில் ஆர்யாவும், அனுஷ்காவும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

காதலே வேண்டாம்
நயன்தாரா தான் இனிமேல் யாரையும் காதலிக்கவே போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தனியாக வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரத்தும் ஆந்திர ஹீரோக்கள்
தெலுங்கு நடிகர்கள் சிலர் நயனை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்களாம். அதனால் முதல் ரவுண்டில் அவர்களுடன் நன்றாக பழகிய நயன்தாரா தற்போது அவர்களை கண்டும் காணாமல் போகிறாராம். இருப்பினும் அந்த ஹீரோக்கள் நயன்தாரா ஹைதராபாத் வந்தால் அவர் தங்கும் ஹோட்டலுக்கே சென்று நட்பு பாராட்டுகிறார்களாம்.

பெற்றோர்
தனியாக தங்கினால் தானே ஹீரோக்கள் ஹோட்டலுக்கு வந்துவிடுகிறார்கள் என்று நினைத்த நயன்தாரா தற்போது ஹைதராபாத் சென்றால் துணைக்கு பெற்றோரையும் அழைத்துச் செல்கிறாராம். நயன்தாராவுடனும் அவர் பெற்றோர் வருவதால் நட்பை புதுப்பிக்கத் துடிக்கும் அந்த ஹீரோக்கள் சற்று தள்ளியே உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











