கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பட பூஜை.. மூக்குத்தி அம்மன் கதை என்னவா இருக்கும்?
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் பூஜை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இன்று போடப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கும் மூக்குத்தி அம்மன் படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை ஊர்வசி, மெளலி, ஸ்முருதி வெங்கட் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

நயன்தாரா விரதம்
மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா விரதமிருந்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாரா அல்லது, புதையல் தேடும் படமாக மூக்குத்தி அம்மன் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

லிட்டில் ஜான்
ஜோதிகா நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான லிட்டில் ஜான் படத்தில் தான் மூக்குத்தி அம்மன் என்ற வார்த்தை பிரபலமானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படமும் அதே மாதிரியான படமாக வருமா என்றும் ரசிகர்கள் ஆருடம் பார்த்து வருகின்றனர்.
பட பூஜை
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் மூக்குத்தி அம்மன் பட பூஜை இன்று போடப்பட்டு, படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. மெளலி, ஊர்வசி மற்றும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பட பூஜையில் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல
சினிமாவில் நடிப்பதை தாண்டி பட பூஜை மற்றும் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாமல், தல அஜித் ரூட்டை பின்பற்றி வருகிறார். இன்று போடப்பட்ட மூக்குத்தி அம்மன் பட பூஜையிலும் வழக்கம் போல அவர் கலந்து கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











