நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு? முழு விவரம் !
சென்னை : நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தற்போது தமிழ் நடிகைகளின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்
நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் மலர்ந்தது
நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் 2015ம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
Recommended Video

7 ஆண்டு காதல்
இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், கோவில்கள், சோஷியல் மீடியா என அனைத்திலும் இவர்கள் இணைந்தே வலம் வந்தனர். இதனால் ரசிகர்கள் பலரும் இவர்களின் திருமணம் எப்போது நடிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். நெற்றிக்கண் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து நயன்தாரா இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் தெரிவித்திருந்தார்.

மகாபலிபுரத்தில்
இதையடுத்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது திருமணம் மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அழைப்பிதழ் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எளிமையான முறையில்
ஆடம்பரம் ஏதும் இல்லாமல் மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரு வீட்டாரின் முறைப்படி திருமணம் நடக்க இருப்பதாகவும், அதாவது நயன்தாராவின் குடும்பமுறைப்படி கேரள முறையிலும், விக்னேஷின் வீட்டு முறைப்படி தமிழ்முறைப்படி என இருவிதமான திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு
இவர்களது திருமணத்திற்கு சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்கள் என மொத்தமாகவே 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், , தளபதி விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமந்தா, நெல்சன் திலீப் குமாரு திருமண அழைப்பிதழ் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில்
ஜூன் 9-ம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் நிச்சயம் இது ஒரு கண்ணைக் கவரும் நிகழ்வாகவே இருக்கும். ரசிகர்கள் மட்டுமல்லாத பல திரைப்பிரபலங்களும் இவர்களின் திருமண நாளை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











