Nayanthara: இதழ் எச்சில் நீா்.. எனும் தீா்த்ததால்.. மகனுக்கு முத்த மழை பொழியும் நயன்தாரா.. சோ ஸ்வீட்

துபாய்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். இவர் தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு ட்ரிப் அடித்துக் கொண்டு இருக்கும் அவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தினமும் தங்களது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா தனது இரண்டு மகன்களுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தான் கால் வைத்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்து வருகிறார். அண்மையில் இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்த அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் ஹிந்தியில் சக்கை போடு போட்டது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. நயன்தாரா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் செய்தது.

nayantara vignesh sivan

இந்தப் படத்தில் நடித்தற்காக அவருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். அவருக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான விருது கொடுக்கப்பட்டது.

ரொமன்ஸ்: சைமா விருதுகள் 2024 நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்ட பின்னர் மேடைக்குச் சென்ற விக்னேஷ் சிவன், நயனுக்காக தனது படத்தில் இடம் பெற்றுள்ளா பாடலான, கண்ணான கண்ணே பாடலை பாடினார். அதில் கண்ணான கண்ணே நீ கலங்காதடி என்ற வரிகளை விக்னேஷ் சிவன் பாடப் பாட நயன்தாரா அழுதார். உடனே நயனைக் கட்டிப்பிடித்த விக்னேஷ் சிவன் அவரது நெற்றியில் முத்தம் வைத்தார். இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் ரொமாண்ட்டிக்காக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

nayantara vignesh sivan

ரசிகர்கள்: விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இன்னும் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அங்கேயே நாட்களை செலவழித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நயன். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை இப்போதுவரை வாரி வழங்கி வருகின்றனர்.

nayantara vignesh sivan

முத்தமழை: இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து அவர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் நயனின் கன்னத்தில் அவரது மகன் கைவைத்தபடி எதோ பேசுவதைப் போல் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு நயனை இன்ஸ்டாவில் பின் தொடருபவர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். நயனை இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு 'என் இதயம்' என நயன் கேப்ஷனிட்டுள்ளார். நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டுள்ளனர்.

nayantara vignesh sivan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X