ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் !

சென்னை : இயக்குனர் பாரதிராஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்க தரமணி புகழ் வசந்த் ரவி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் ஏற்கனவே நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ராக்கி திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது ரவுடி பிக்சர்ஸ் இதன் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

பூஜையுடன் தொடங்கப்பட்டது

பூஜையுடன் தொடங்கப்பட்டது

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஏற்கனவே நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கும் நிலையில் இப்போது "காத்துவாக்குல இரண்டு காதல்" திரைப் படத்தில் மீண்டும் இணைந்திருக்க இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வர இப்பொழுது இயக்குனர் பாரதிராஜா மற்றும் தரமணி பட புகழ் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையும் கைப்பற்றியுள்ளது.

உதவி இயக்குனராக

உதவி இயக்குனராக

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று பாராட்டுகளை குவித்த நிலையில் அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அருண் மாதேஸ்வரன், சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று திரைப்படத்தில் டயலாக் போர்சனையும் எழுதியுள்ளார்.

செல்வராகவன் நடிகராக

செல்வராகவன் நடிகராக

இவ்வாறு மிகப்பிரபலமான இரண்டு முக்கிய இயக்குனர்கள் உடன் பணிபுரிந்த அருண் மாதேஸ்வரன் இப்பொழுது செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் "சாணிக் காகிதம்" திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செல்வராகவன் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இயக்குனர் செல்வராகவன் நடிகராக களம் இறங்கும் முதல் திரைப்படம் இதுவேயாகும்.

Recommended Video

கே.ஜி.எஃப் ராக்கி பாய் யஷ்க்கு பர்த்டே.. 5000 கிலோவில் கேக் வெட்டி மாஸ் காட்டிய ரசிகர்கள்!
வெளியீட்டு உரிமையை கைப்பற்றி

வெளியீட்டு உரிமையை கைப்பற்றி

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரனின் அறிமுக திரைப்படமான ராக்கி படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததைத் தொடர்ந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்க அதனை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X