சீதா வேஷத்தில் நடிச்சாச்சு இனி அம்மன் வேஷம் போடலாம் என்று நயன் சிந்தனை செய்கிறார்

சென்னை : நயன்தாரா கடைசியாக பிகில் படத்தில் நடித்திருந்தார், அடுத்ததாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார் . அந்த படத்தில் கண் பார்வையை இழந்த பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் இதற்கு முன்பே வெளியானது ,மேலும் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி இயக்க இருக்கும் 'மூக்குத்தி அம்மன் ' படத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது மூக்குத்தி அம்மன் பட முதல் பார்வை போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி . அது மட்டும் இல்லாமல் நயன்தாராவும் ட்விட் செய்து போஸ்ட்டரை வைரல் ஆக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதுகிறார் என்ற தலைப்பு இதற்கு முன்பே வெளியாகி இருந்தது ஆனால் ஆர்.ஜே.பாலாஜி படத்தை இயக்க போவது தற்போது தான் உறுதியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி படத்திற்கு கதை எழுதி இருந்தார் அந்த படத்தை பிரபு இயக்கிருந்தார்.

nayanthaara with rj balaji combo for the first time as lead.

தற்போது மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது நண்பனான என்.ஜே.சரவணன் இணைந்து இயக்க உள்ளனர் .இந்த படத்தின் கதை ,திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஆர்.ஜே.பாலாஜியே எழுதியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக ஆர்.ஜே.பாலாஜி தான் நடிக்கிறார் என்றும் முதல் பார்வை போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது .

நயன்தாரா ராஜா ராணி படத்திற்கு பிறகு கதை தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சம்பளம் அதிகமாக கொடுத்தாலுமே தனகேற்ற வலுவான கதாபாத்திரம் கதையில் இல்லையென்றால் படத்தில் நடிக்க மறுத்து விடுகிறாராம் . பெரிய ஹீரோக்கள் படம் என்றாலும் கூட நடிகைக்கு கொஞ்சமாவது முக்கியதுவம் இருந்தால் மட்டுமே படத்தில் ஒப்பந்தமாகிறார் .

nayanthaara with rj balaji combo for the first time as lead.

தற்போது நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்க ஒத்து கொண்டிருக்கிறார் என்றால் கட்டாயம் கதைக்கு நல்ல வலுவான நாயகி தேவை பட்டிருக்கும் என்று தான் அர்த்தம். அதனாலே கட்டாயம் நயன்தாரா இந்த படத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .

nayanthaara with rj balaji combo for the first time as lead.
தற்போது இந்த படத்தை எல்.கே.ஜி மற்றும் கோமாளி படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தான் மீண்டும் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐசரி கணேஷன் வெற்றி கூட்டணி தொடருமா என்பதை காத்திருந்து பார்போம்.இந்த படம் 2020 மே மாதம் வெளியாகும் என்ற தகவலும் முதல் பார்வை போஸ்டரிலே சொல்லபட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X