சிவகார்த்திகேயனுக்காக இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் நயன்தாரா
Recommended Video

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக வருகிறாராம்.
சிவகார்த்திகேயன் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் மன்னன் பட பாணியில் இந்த படம் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

போலீஸ்
மன்னன் படத்தில் வந்த விஜயசாந்தி கதாபாத்திரம் போன்று நயன்தாராவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயின்
ராஜேஷ் படத்தில் காமெடி இல்லாமலா. இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல ஹீரோயின் நயன்தாராவும் காமெடி செய்யப் போகிறாராம்.

முக்கியத்துவம்
லேடி சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் நயன்தாராவுக்கு சும்மா மரத்தை சுத்தி வரும் கதாபாத்திரம் அல்லாமல் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொடுக்கிறாராம் ராஜேஷ்.

காமெடி போலீஸ்
காமெடி போலீஸ் சரி ராஜேஷ், ஆனால் சில படங்களில் ஹீரோயினை காமெடி போலீஸ் என்று கூறி லூசு போலீஸாக காட்டினார்கள். அப்படி எதுவும் ஆகிவிடாமல் பார்த்துக் கொண்டால் சரி தான்.


Click it and Unblock the Notifications











