கலெக்டர் டு நிருபர்... லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் அவதாரம்!
சென்னை : விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதையடுத்து, தற்போது சிபிராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'சத்யா' படத்தை இயக்கியிருக்கிறார். இதன்பிறகு அவர், நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.
கடந்த ஆண்டு பவன்குமார் இயக்கத்தில், கன்னடத்தில் வெளியான படம் 'யு-டர்ன்'. சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. 'விக்ரம் வேதா', 'ரிச்சி' படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் வேடத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். 'அறம்' படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாரா, இந்த படத்தில் பத்திரிகையாளராக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே சரத்குமார் நாயகனாக நடித்த 'தலைமகன்' படத்தில் நயன்தாரா நிருபராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது முறையாக நிருபராக நடிக்க இருக்கிறார். கலெக்டர் வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா இப்படத்திலும் ரசிக்க வைப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











