தல, தளபதியை அடுத்து ரஜினிக்காகவும் கொள்கையை தளர்த்துவாரா நயன்?
Recommended Video

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த படத்திற்கு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறதாம்.
இது தொடர்பாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நயன்தாரா
முருகதாஸ் நயன்தாராவை சந்தித்து கதை சொன்னாராம். கதையை கேட்ட நயன்தாரா யோசித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். நயன்தாரா மட்டும் ஓகே சொன்னால் இது அவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் 2வது படமாகும்.

ரஜினி
முன்னதாக நயன்தாரா சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். நயன்தாரா கோலிவுட்டில் அறிமுகமான புதிதிலேயே ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்கை
நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று ஒரு கொள்கை வைத்திருந்தார் நயன்தாரா. அதை முதலில் அஜித், பின்னர் விஜய் என்று ஒவ்வொரு ஹீரோவுக்காகவும் தளர்த்துக் கொண்டிருக்கிறார். ரஜினிக்காகவும் தனது கொள்கையை தளர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படம்
முதலில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் ரஜினி ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்று ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











