அட்ராசக்க... நயன்தாராவை இயக்கும் 'லட்சுமி' குறும்பட இயக்குநர்!

By Vignesh Selvaraj

Recommended Video

என்னது மறுபடியும் மொதல்லருந்தா..?- லட்சுமி' குறும்படக் குழுவின் அடுத்த வீடியோ ரிலீஸ்!- வீடியோ

சென்னை : மணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தக் குழுவின் அடுத்த குறும்படமான 'மா' சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில், இந்தக் குறும்படங்களின் இயக்குநர் சர்ஜுன் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லட்சுமி குறும்படம்

லட்சுமி குறும்படம்

பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்ட 'லட்சுமி' குறும்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது.

செம வைரல்

செம வைரல்

லட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யூ-டியூபில் 50 லட்சத்தைக் கடந்து எல்லோரையும் கவனிக்க வைத்தது. மேலும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் இக்குறும்படம் குறித்து வர, பெரும் வாக்குவாதமே நடந்து முடிந்தது.

விவாதம் கிளப்பும் இயக்குநர்

விவாதம் கிளப்பும் இயக்குநர்

சமீபத்தில் 'மா' என்ற குறும்படம் சமூகவலைத்தளத்தில் மிகப்பரவலாக பாராட்டை பெற்றது. இப்படத்தையும் 'லட்சுமி' இயக்குனர் சர்ஜுன் இயக்க, கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

அதுமட்டுமில்லாமல் இயக்குநர் சர்ஜுன் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தை சத்யராஜை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் மிகவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நயன் தாரா ஹீரோயின்

நயன் தாரா ஹீரோயின்

'அறம்', 'குலேபாகவலி' ஆகிய படங்களைத் தயாரித்த கே ஜி ஆர் ஸ்டூடியோ தங்களது மூன்றாவது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க 'லட்சுமி', 'மா' குறும்படங்களை எடுத்த சர்ஜுன் இயக்க உள்ளார்.

திகில் திரைப்படம்

திகில் திரைப்படம்

அதற்கான அறிவிப்பை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நயன்தாரா நடிக்கும் இப்படம் திகில் கலந்து ஒரு பேய்ப்படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, திரைக்கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

அஜித் ஜோடியாக 'விசுவாசம்' படத்தில் நயன் தாரா நடிக்கவிருப்பதாக இன்று அறிவிப்பு வெளியானது. அதே நேரத்தில் இளம் இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இப்படமும் சர்ச்சையைக் கிளப்புமா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X