நயன்தாராவும் டிடியும் இவ்வளவு க்ளோஸ் பிரண்ட்ஸா?.. வைரலாகும் பிக்ஸ்!
சென்னை : நயன்தாராவுடன் டி.டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் முதன்மையானவர் நயன்தாரா. தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமான நயன் தொடர்ந்து சந்திரமுகி, பில்லா போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்கர்ளுடன் நடித்தார், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2010ல் கன்னட திரைப்படத்திலும் தனது கால்தடம் பதித்தார். பல சர்ச்சைகள் இவர் மேல் எழுந்தாலும் அசைக்க முடியாத மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் விக்னேஷிவனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
நயன் பொதுவாக விக்னேஷிவனை தவிர்த்து யாரிடமும் அவ்வளவு க்ளோசாக இருந்ததில்லை. இவருக்கு பல பெண் தோழிகள் இருந்தாலும், எப்போதும், ஒரு விதமான டிஸ்டன்ஸ் மெயிண்டேன் பண்ணுவார். மனதிற்கு மிகவும் பிடித்தால் மட்டுமே உரிமையுடன் கட்டி அணைப்பார். அப்படி இருக்க, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி யிடம் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார் என்று பலரும் பேசி வருகின்றனர்.

அதற்கு சாட்சியாக பல புகைப்படங்களில் டிடி நயனுடன் க்ளோசாக இருப்பதை பார்க்கலாம். யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகாத நயன் எப்படி டிடி யுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பது நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.

டிடி அனைவரிடமும் அன்பாகவும் ஜாலியாகவும் பேசி பழகக்கூடிய ஒருவர் எனவே நயனிடம் எளிதில் நெருங்கிவிட்டார் எனவும் பேசுகிறார்கள். நயன் ரசிகர்கள் சிலர் டி டியை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பல பல போட்டோஸ் இருந்தாலும் எல்லாம் ஒரு விதமான அன்பின் அடையாளமாக தான் பார்க்கபடுகிறது.
டி டி டெலிவிஷன் சூப்பர் ஸ்டாராகவும் , சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக நயனும் எடுத்த பல த்ரோ பாக் போட்டோஸ் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. இன்னும் சில புகைப்படங்கள் வெளி வராமலே இருக்கிறது. அனைத்து போட்டோக்களும் ஒட்டு மொத்தமாக இந்த லாக் டவுன் முடிவதற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











