இரண்டு வருஷமா தனுஷ் கொடுத்த குடைச்சல்.. இருவருக்கும் என்ன பிரச்சனை.. கொட்டித்தீர்த்த நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா, தனுஷும் யாரடி நீ மோகினி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படம் நயன்தாராவிற்கு கம்பேக் திரைப்படமாக அமைந்தது என்று சொல்லலாம். இதையடுத்து நயன்தாரா, தனுஷ் நல்ல நண்பராக இருந்த நிலையில், இருவருக்கும் இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டு அது பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நயன்தாரா குறித்து ஏராளமான சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று கொண்டாடி வருகின்றனர். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்: நடிகை நயன்தாரா 2013ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் படத்தில் நடித்த போது, படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட தொடர்ந்து இருவரும் பல ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இவர்களின் திருமண வீடியோ netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் இருந்து எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தனர்.
3 நொடிக்கு 10 கோடி: இதை அடுத்து கடந்த வாரம், nayanthara beyond the fairy tale என்ற பெயரில் நவம்பர் 18ந் தேதி நயன்தாராவின் பிறந்த நாளில் வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் ஒரு டிரைலரை வெளியிட்டு இருந்தது. அந்த டிரைலரில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சியை 3 நொடிக்கு பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோ ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் குறித்தும், அதற்கு நடிகர் தனுஷ் தடையாக இருந்ததாகவும் பதிவிட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளார்.
நானும் ரவுடிதான்: அதில், சினிமாவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் ஒரு தனி பெண்ணாக இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதை உணர்த்தும் விதமாக எனது திருமண வீடியோவை ஒரு ஆவணமாக வெளியிட முடிவு செய்தேன். அந்த ஆவணத்தில், நானும் ரவுடிதான் படத்தின் இன்று வரை ஒரு உணர்வுபூர்வமான பாடலாக இருப்பதால்,அந்த பாடலை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அதை பயன்படுத்த நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், பாடல் வரிகளை நீக்கிவிட்டோம். இதனால் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இரண்டு ஆண்டுகளாக குடைச்சல்: மேலும், படத்தை தயார் செய்துவைத்து விட்டு NOCக்காக உங்களின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தோம். உங்களிடம் இருந்து எந்தவிதமான ஒப்புதலும் வராததால், பிரச்சனையை தீர்க்க, திருமண வீடியோவில் நானும் ரௌடி படத்தின் பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, செல்போனில் எடுத்த சில காட்சிகளை மட்டுமே அந்த திருமண வீடியோவில் டிரைலரை வெளியிட்டோம். ஆனால், ட்ரெய்லர் வெளியான பிறகு உங்களிடம் வந்த நோட்டீஸ் என்னை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த டிரைலரில் இருக்கும் வெறும் 3 வினாடிக்காக 10 கோடி கேட்டதால் நான் மிகுந்த அதிருப்தி அடைந்தேன். உங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை நான் பெற்றுள்ளேன், அதற்கு நாங்கள் சட்டப்பூர்வமான வழிகளில் பதிலளிப்பேன் என நயன்தாரா அதில் கூறியுள்ளார்.
இதுதான் பிரச்சனை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனில் காதலுக்கு அடித்தளமாக இருந்தது நானும் ரௌடி தான் படம் தான். இதனால், தனது திருமண ஆவணப்படத்தில் அந்த படத்தின் காட்சி, பாடல் இருந்தால் உணர்வு பூர்வமாக இருக்கும் என்று நயன்தாரா நினைத்தார். ஆனால், நானும் ரௌடி தான் படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் பிலிம்ஸ் தயாரித்ததால், அந்த படத்தின் பாடலையோ, காட்சியையோ பயன்படுத்தக்கூடாது என்று தனுஷ் ஆட்சேபனை தெரிவித்து இரண்டு ஆண்டுகளாக அனுமதி அளிக்காமல் இருந்துள்ளார். ஆனால், தற்போது வெளியான டிரைலரில் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சி இருப்பதால், தனுஷ் தற்போது நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











