நயன்தாரா, கவினின் 'ஹாய்' படத்தின் "கண்ணுக்குழியா" பாடல் வெளியானது!
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்டபம் ஹாய். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் நிலையில் இப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் கவின்: விஜய் டி.வியில் அனைவரின் மனதை கவர்ந்த 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை தனது பயணத்தை தொடங்கினார் கவின். அதன் பின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் ரோலில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் பிடித்தார். பின் சின்னத்திரையில் இருந்து விலகி சத்ரியன்,நட்புன்னா என்னான்னு தெரியுமா போன்ற படத்தில் நடித்து வந்த கவினுக்கு பெயர் சொல்லும் படமாக இருந்தது 'லிஃப்ட்'. அந்த படத்தை தொடர்ந்து டாடா, ஸ்டார், கிஸ், மாஸ்க் போன்ற படத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.

நயன்தாராவின் கவின்: தற்போது கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ஹாய்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ், ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதிகா, பிரபு, பாக்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கூட்டு குடும்பம், ரொமான்ஸ் காதல் கதை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கண்ணுக்குழியா: ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள, ஹாய் படத்தில் இருந்து "கண்ணுக்குழியா" முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், சற்று முன் "கண்ணுக்குழியா" பாடல் வெளியானது. ஜென் மார்ட்டின் இசையில் விஷ்ணு எடவனின் பாடல் வரியில், ஜிவி பிரகாஷின் குரல் அட்டகாசமான "கண்ணுக்குழியா" பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications