கொரோனா தளர்வுக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகை நயன்தாரா.. சம்பளத்தைக் குறைத்து அசத்தல்!

By

சென்னை: தான் நடிக்கும் மலையாளப் படத்துக்காக நடிகை நயன்தாரா சம்பளத்தை குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா இப்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜி, மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளனர்.

வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளார்.

காத்து வாக்குல

காத்து வாக்குல

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. கொரோனா காரணமாக இந்தப் படங்களில் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

ஹாலிவுட் சாயல்

ஹாலிவுட் சாயல்

இதற்கிடையே ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் இருவரும் சென்றனர். காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி ஏர்போர்ட்டில், தனி விமானத்தில் நடிகை நயன்தாரா, ஹாலிவுட் நடிகை சாயலில் இறங்கி வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின.

நயன்தாராவின் அம்மா

நயன்தாராவின் அம்மா

இதையடுத்து இருவரும் வெக்கேஷனுக்காக கோவா சென்றனர். அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.

த்ரில்லர் நிழல்

த்ரில்லர் நிழல்

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் உருவாகும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்கும் இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் நாளை தொடங்குகிறது.

மீண்டும் சேர்ந்து

மீண்டும் சேர்ந்து

குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் டிவென்டி 20 படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். 'இந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. அதற்காக பல நடிகைகளை தேடினர். நான் தான் நயன்தாராவை பெயரைச் சொன்னேன் என்று கூறியுள்ளார் குஞ்சாகோ போபன்.

சம்பளக் குறைப்பு

சம்பளக் குறைப்பு

கொரோனா காரணமாக, கேரள நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்கும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து நடிகர்கள், மோகன்லால், டோவினோ தாமஸ் உள்பட பலர் தங்கள் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகை நயன்தாராவும் சம்பளத்தைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X