நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.. யார் ஹீரோ தெரியுமா.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை: மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் போன்ற படங்களில் நடிப்பதன் மூலம் நயன்தாரா பிஸியாக இருக்கிறார். அதே வேகத்தில் மலையாளத்திலும் நிவின் பாலியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதையும் தாண்டிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019இல் நிவின் பாலி, நயன்தாராவும் இணைந்து லவ் ஆக்சன் ட்ராமா படங்களில் நடித்தனர். அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் சுமாரான வரவேற்பை பெற்றது. காமெடி கலந் காதல் கதையாகவும் வெளியானது. தற்போது 6 வருடங்கள் கழித்து நயன்தாரா - நிவினும் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிப்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். நடிகர் நிவின் பாலியே இப்படத்தை தயாரிக்கிறார்.

nayanthara-and-nivinpauly-dear-students-movie-shooting-wrapped

நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படங்கள் எதுவும் பெரிதாக அமையவில்லை. ஆனால், நயன்தாராவுடன் கூட்டணி அமைத்து வெற்றிப்படமாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கும் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதான வெற்றி படங்கள் இல்லாவிட்டாலும் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. மற்ற நடிகைகளை காட்டிலும் நயன்தாராவின் டேட் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம்.

கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் டிரெண்டாகியிருக்கும் யஷ் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் டேட்டையும் படக்குழு அறிவித்துள்ளது. அதேபோன்று மூக்குத்தி அம்மன் 2 படத்தில் விரதம் இருந்து நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் கண்டிப்பாக 100 கோடி அடிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட பூஜையின் செலவே 11 கோடி அளவிற்கு பிரம்மாண்ட செட் அமைத்து சூட்டிங்கை தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி.

தொடர்ந்து சீரிஸான படங்களிலே நடித்து வரும் நயன்தாரா டியர் ஸ்டூடண்ட்ஸ் படம் காமெடி கலந்த காதல் டிராமா படமாக உருவாகிறதாம். நிவின் பாலி நயன்தாராவிற்கு பிடித்த நடிகர், நணபர் என்றே கூறலாம். நண்பரின் வெற்றிக்காக அவரும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கியுள்ளனர். படு ஜோராக நடந்து வந்த படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக படக்குழுவினர் சோஷியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

nayanthara-and-nivinpauly-dear-students-movie-shooting-wrapped

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று நிவின் பாலி, நயன்தாரா மற்றும் துணை நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா நேரடி மலையாள படத்தில் நடிப்பதால் இப்படம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வருடங்களை கடந்துவிட்டன. நிவின் பாலியும் ஒரு ஹிட் படத்தை கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறார். டியர் ஸ்டூடண்ட்ஸ் எல்லோருக்கும் பிடித்த டியராக இருக்க வாழ்த்துகள் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X