தனுஷ் படத் தயாரிப்பாளர் திருமணத்தில் கலந்துக் கொண்ட நயன்தாரா.. சிவகார்த்திகேயனும் போயிருக்காரே!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் இன்று நடைபெற்றது. அதில், நடிகை நயன்தாரா கலந்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நெட்பிளிக்ஸில் தனது திருமண ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற நானும் ரவுடி தான் படக் காட்சிக்கு தனுஷ் என்ஓசி வழங்காமல் கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடித்ததாகவும் 3 செகண்ட் காட்சிக்கு 10 கோடி ரூபாய் கேட்டார் என்றும் 3 பக்கத்துக்கு கடிதம் எழுதி தனுஷுக்கு எதிராக ஏகப்பட்ட மலையாள நடிகைகளை திருப்பியிருந்தார்.

nayanthara dhanush sivakarthikeyan

தனுஷ் உடன் இணைந்து நடித்த பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்து லைக் போட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்: நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக் கதைகள் உள்ளிட்ட படங்களில் விக்னேஷ் சிவனுக்கு உதவி இயக்குநராக இருந்தவர் தான் ஆகாஷ் பாஸ்கர். Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் அவர் தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா பங்கேற்பு: நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை கடந்த 18ம் தேதி மும்பையில் குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருந்தார். மேலும், தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தையும், ராக்காயி படத்தின் டீசரையும் வெளியிட்டு இருந்தார். தனுஷுக்கு எதிராக புகார் தெரிவித்த நிலையில், முதல் முறையாக சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

nayanthara dhanush sivakarthikeyan

சிவகார்த்திகேயன், அனிருத்: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் உள்ளிட்டோரும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் திருமண மேடை அருகே ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தனுஷ் பங்கேற்பு: இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமணத்துக்கு நடிகர் தனுஷும் கலந்துக் கொண்டுள்ளார். நயன்தாரா மற்றும் தனுஷ் ஒரே நேரத்தில் திருமணத்தில் பங்கேற்றதை பார்த்து அங்கே இருந்த பிரபலங்களே அதிர்ச்சியாகி விட்டனர். சிவகார்த்திகேயனும் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேலும், ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X