ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாரா-விக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

சென்னை : 75 வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, இந்திய கொடியை பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திரக் கொடியை ஏற்றி வந்தனர்.

குடிமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களில் சுதந்திர கொடியை மிளிர விட்டனர்.

"நம்ம கொடி...ஸ்பெயின் எங்கும்"

75வது சுதந்திர தினத்தை திரைப்பிரபலங்கள் தங்கள் வீட்டில் தேசிய கொடியை பறக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "நம்ம கொடி...ஸ்பெயின் எங்கும்" என கூறி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த விக்கி, நயன்தாரா ஜோடி, கடந்த ஜூன் மாதம் 9ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரெசாட்டில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். 15க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் முன்னிலையில், வேதமந்திரங்கள் ஓத சினிமா பிரபலங்களே வாய்பிளக்கும் அளவுக்கு திருமணம் தடபுடலாக நடைபெற்றது.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

ஹனிமூன் இல்லை என்று சொல்லிவந்த இந்த ஜோடி, திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், லைக்ஸ்களை அள்ளியது. இதையடுத்து நாடு திரும்பிய நயன்தாரா அட்லியின் ஜவான் படப்பிடிப்பில் பிஸியானார்.

இரண்டாவது ஹனிமூனா

இரண்டாவது ஹனிமூனா

இதே போல ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் விக்கி மிகவும் பிஸியாக இருந்தார். சமீபத்தில் அந்த நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து விக்கி மீண்டும் தன மனைவியுடன் உல்லாச பயணம் கிளம்பி விட்டார். தன மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெயிட்டு வருகிறார் விக்கி. ரகிகர்கள் பலரும் என்ன இரண்டாவது ஹனிமூனா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X