காதலரை என்னம்மா லுக் விடுறாங்க நயன்தாரா.. விக்னேஷ் சிவன் ஷேர் பண்ண கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்!
சென்னை: காதலி நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
சுமார் 6 ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்களின் தயாரிப்பில் வெளியான ராக்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படம் எங்கப்பா என கேட்டு வந்த ரசிகர்களுக்காக தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

என்னம்மா பாக்குறாங்க
விக்னேஷ் சிவன் கேஷுவலாக எங்கோ பார்ப்பது போல நிற்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது வருங்கால கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை வச்சக் கண்ணு வாங்காமல் அப்படியொரு லுக் விட்டு பார்க்கும் புகைப்படம் தற்போது வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நாளும் வரும் 2022ம் ஆண்டும் அனைவருக்கும் லவ்லியாக இருக்க வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ராக்கிங் ராக்கி
அதீத வயலென்ஸ் உடன் ஒரு கவிதை படைப்பாக வெளியாகி உள்ள ராக்கி திரைப்படம் திரையரங்குகளில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போடுகிறது. ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்திற்கு பிறகு அதிகளவில் யங்ஸ்டர் கூட்டம் இந்த படத்துக்கு அதிகரித்து இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தனர்.

அந்த கவலை
கூழாங்கல் திரைப்படம் எப்படியாவது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் ஆவது வந்துவிடும் என பெருங் கனவுடன் காத்திருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கடைசி நேரத்தில் நாமினேஷன் லிஸ்ட்டுக்கு முந்தைய போட்டியிலேயே கூழாங்கல் திரைப்படம் வெளியேறியது பெரிய கவலையை கொடுத்தது. ஆனாலும், டைகர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை அந்த படம் பெற்றுத் தந்துள்ளது.

திருமணம் எப்போ
இதுவரை சுமார் 6 கிறிஸ்துமஸ் வரை காதலர்களாக சேர்ந்து கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எப்போது தான் கணவன் மனைவியாக கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகளை சேர்ந்து கொண்டாட போறாங்க என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டு பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆண்டு இருவரது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











