Don't Miss!
- News
கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்
- Finance
அஜர்பைஜான் நாட்டில் தடம் பதிக்கும் கௌதம் அதானி..!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அட நம்ம நயன்தாராவா இது..சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!
சென்னை : சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா புத்தாண்டு பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு நல்ல ஆண்டாகவே அமைந்தது எனலாம். நீண்ட நாள் காதல் கைகூடி அது திருமணத்தில் முடிந்துள்ளது.
அதோடு மட்டும் இல்லாமல் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் இரட்டை ஆண் குழந்தை என மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நயன்தாரா.
“கனெக்ட்“
வெற்றிப்படமாக்கிய
ரசிகர்களுக்கு
நன்றி…அறிக்கை
வெளியிட்டு
நெகிழ்ந்த
நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த நயன்தாரா பல விதமான சர்ச்சைகள், காதல் தோல்வி, வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து அதை எதிர்த்து போராடி மீண்டு வந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் திரைப்படம் இவரது வாழ்க்கையை மாற்றியது எனலாம். அந்த படத்தின் கதை சொல்ல சென்ற போது தான் விக்னேஷ் சிவன், முதல் முதலாக நயன்தாராவை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார்.

கோலாகலமாக நடந்த திருமணம்
ஒரு பக்கம் இவர்கள் காதல் வெற்றி பெற, மறுபக்கம் நானும் ரௌடிதான் திரைப்படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு இருவரும் கோவில்கள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றில் அழகாக கைகளை பிடித்தபடி வலம் வந்தனர். அனைவரும் பிடித்தமான ஜோடியாக மாறிப்போன இவர்களின் திருமணம் ஜூன் 9ந் தேதி திரைத்துறையை வியந்து பார்க்கும் அளவுக்கு நடந்தது. இந்த திருமண விழாவில் குறிப்பிட்ட சில விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா
திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்தாரா. மனதிற்கு பிடித்த காதலன் கணவன் ஆனது, தாய் ஆனது என மகிழ்ச்சியில் திளைத்து போய் உள்ளார். புத்தாண்டையோட்டி தனது செல்லக்குட்டிகளை கொஞ்சும் போட்டோவை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி இருந்தார்.

புத்தாண்டு பரிசு
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரத்தில் வசிக்கும் மக்களை சந்தித்து புத்தாண்டு பரிசு வழங்கி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நயன்தாரா கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து தலையில் கேப் போட்டிருந்தார். அவருடன் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் உடன் இருந்தார். நயன்தாராவை திடீரென சந்தித்த சாலையோர மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள்.

அடுத்தடுத்த படங்களில்
நயன்தாராவின் நடிப்பில் 2022ம் ஆண்டு ஐந்து படங்கள் வெளியாகி உள்ளன. இதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அமேசான் ஓடிடியில் ஓ2, காட்பாதர், கோல்டு, கனெக்ட் போன்ற படங்கள் வெளியாகின. திகில் திரைப்படமான கனெக்ட் படம் ஓரளவு ஓடியது. தற்போது நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஜூன் மாதம் 2ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் நடித்து வருகிறார்.