For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தல தீபாவளியா? நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரொமான்டிக் போட்டோவை பார்த்து கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்!

  |

  சென்னை: மூக்குத்தி அம்மன் பட புரமோஷனில் இருந்த நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்து போடுவதை சில வாரங்களாக மறந்து இருந்தார்.

  இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, விக்னேஷ் சிவனுடன் மீண்டும் படு நெருக்கமாக கொடுத்துள்ள ரொமான்டிக் படத்தை பார்த்த நெட்டிசன்கள், தல தீபாவளியா? என கலாய்த்து வருகின்றனர்.

  மேலும், சிலர் எப்ப தான் கல்யாண சாப்பாடு போடுவீங்க என்றும் உரிமைக் குரல் எழுப்பி வருகின்றனர்.

  சமுத்திரகனி முதல் தன்ஷிகா வரை.. பிரபலங்கள் வாழ்த்தும் ஒன் இந்தியா தமிழ் சிறப்பு தீபாவளி வீடியோ!சமுத்திரகனி முதல் தன்ஷிகா வரை.. பிரபலங்கள் வாழ்த்தும் ஒன் இந்தியா தமிழ் சிறப்பு தீபாவளி வீடியோ!

  காதல் சிக்னல்

  காதல் சிக்னல்

  N மற்றும் V எழுத்துக்கள் இடம்பெற்ற தொப்பிகளை அணிந்து முகத்தை மறைத்தும், முகத்தை காட்டியும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின. மேலும், அதற்கு கேப்ஷனாக கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி பாடல் வரிகளையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். இன்னமும் கல்யாணம் ஆகலயே பாஸ்.

  நயன்தாராவுடன் கொண்டாட்டம்

  நயன்தாராவுடன் கொண்டாட்டம்

  இந்து மதத்தை சேர்ந்த விக்னேஷ் சிவனும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நயன்தாராவும் மதங்களை கடந்து மனங்களால் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகின்றனர். வெள்ளை நிற சுடிதாரில் நெற்றியில் திருநீரு, குங்குமம் இட்டு பக்தி பரவசமாக விநாயகர் சதுர்த்தியை தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

  கோயில் கோயிலாக டூர்

  கோயில் கோயிலாக டூர்

  விக்னேஷ் சிவன் ரொம்பவே சாமி பக்தி உடையவர். சமீபத்தில் சபரி மலைக்கு எல்லாம் சென்று வந்தார். நடிகை நயன்தாராவையும் ஏகப்பட்ட இந்து கோயில்களுக்கு அழைத்துச் சென்று ஆன்மிக டூர் அடித்தார். அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற இருவரும் அங்கே எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினார்.

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  அதே போல, கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட பண்டிகைகளை நயன்தாராவுடன் இணைந்து விக்னேஷ் சிவனும் கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ், நியூ இயர் பண்டிகளை இருவரும் நியூயார்க்கில் நல்லாவே செலிபிரேட் பண்ணார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அமெரிக்கா போக முடியாது, வேண்டுமென்றால் மாலத்தீவுக்கு செல்லலாம்.

  வேற லெவல் ஓணம்

  வேற லெவல் ஓணம்

  கொரோனா லாக்டவுனை காதலருடன் கழித்த நயன், லாக்டவுன் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில், தனி விமானத்தில் விக்கியுடன் கொச்சின் பறந்தார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட ஓணம் புகைப்படங்கள் பார்த்த பலரும், ரகசியமாக திருமணமே செய்து கொண்டார்களா? என்கிற சந்தேகத்தையே கிளப்பி விட்டது.

  தல தீபாவளி

  தல தீபாவளி

  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நாளை தீபாவளி திருவிழாவாக மூக்குத்தி அம்மன் ரிலீசாகிறது. சில மாதங்களாக இருவரும் இணைந்து போட்டோ ஏதும் போடாத நிலையில், தீபாவளியை முன்னிட்டு செம ரொமான்டிக்கான டாப் ஆங்கிள் போட்டோவை போட்டுள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் என்ன தல தீபாவளியா? வாழ்த்துக்கள் என கலாய்த்து வருகின்றனர்.

  எப்போ கல்யாணம்

  எப்போ கல்யாணம்

  திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், மனதால் இருவரும் மணம் புரிந்து கொண்டு ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். 5 ஆண்டுகளை தாண்டி இவர்களது காதல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், சீக்கிரமே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும், திருமணம் எப்போ என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிகின்றன.

  கொரோனாவால் திருத்தபட்ட நடிகர்களின் சம்பள பட்டியல் | Producers New announcement
  நயன்தாரா தரிசனம்

  நயன்தாரா தரிசனம்

  போன பொங்கலுக்கு விஸ்வாசம், போன தீபாவளிக்கு பிகில், இந்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் மற்றும் இந்த ஆண்டு தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் என எந்த ஒரு பெரிய பண்டிகையையும் மிஸ் பண்ணாமல் தனது ரசிகர்களுக்கு நயன்தாரா தரிசனம் கொடுத்து வருகிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள மூக்குத்தி அம்மன் மாபெரும் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Nayanthara and Vignesh Shivan Diwali special romantic photo goes viral in social medial netizens troll and fans praised the photo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X