சொந்த மண்ணாச்சே.. துடித்துப்போன நயன்தாரா.. வயநாடு நிவாரணத்துக்கு நிதியுதவி கொடுத்துட்டாரு!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 316க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்திய ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

Nayanthara Wayanad disaster Vignesh Shivan

இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர். அதுதொடர்பான அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

உதவும் உள்ளங்கள்: இந்த பெரும் துயரத்தில் துணை நிற்கும் விதமாக தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு ரூபாய் 5 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது. அதேபோல், நடிகர் விக்ரம் ரூபாய் 20 லட்சமும், நடிகர் சூர்யா, கார்த்தி மற்று நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார்.

நயன்தாரா உதவி: கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை நயன்தாரா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வயநாட்டில் இப்படியொரு இயற்கை சீற்றம் ஏகப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டதை அறிந்த அவர், உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் சார்பாக 20 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதுதொடர்பான அறிவிப்பை தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Nayanthara Wayanad disaster Vignesh Shivan

வருத்தமாக உள்ளது: கேரளாவில் உள்ள வயநாட்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மிகவும் வருத்தமாக உள்ளது. மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் அனைவருக்கும் தலை வணங்குகிறோம். இந்த மோசமான சூழலில் எங்களால் முடிந்த இந்த உதவி செய்கிறோம் என பதிவிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் பெயர்களும் அதில், இடம்பெற்றுள்ளன.

எல்ஐகே: ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் எல்ஐகே படத்தின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இன்று க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக்கையும் நயன்தாரா வெளியிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X