Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் புதிய காருக்கு பூஜை போட்ட நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது புதிய காருக்கு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜை போட்டுள்ளனர்.
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
முன்னதாக ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் ஸ்டார் வேல்யூ உள்ளதால் தியேட்டரிலேயே வெளியிட தீர்மானித்துள்ளனர்.
குஷ்பு – சுந்தர்.சி.,யை செல்லமாக கலாய்த்த டிடி... என்ன சொல்லிருக்கார் பாருங்க
கோயில் கோயிலாக
நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் ஆறு ஆண்டுகளை கடந்து ரொமான்டிக் நடை போட்டு வருகிறது. எப்போது தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என கேட்டு கேட்டு ரசிகர்களே அந்த கேள்வியை இனிமேல் கேட்கக் கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டனர். இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பக்திமான்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ரொம்பவும் பக்திமான். ஆண்டுதோறும் தவறாமல் சபரி மலைக்கு மாலை போட்டு சென்று வருகிறார். விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் பக்தி மார்க்கத்தில் ஐக்கியமாகி விட்டார். விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அனைத்து இந்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
லிவிங் டுகெதர்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே வீட்டில் தான் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் இணைந்து போயஸ் கார்டனில் ஒரு பெரிய வீட்டையும் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடிக்கடி இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கும் டூர் அடித்து வருகின்றனர்.
புதிய கார்
ஏகப்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிதாக ஒரு இனோவா காரை வாங்கி உள்ளார். அதற்கான பூஜையை போட்ட நிலையில், தான் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ஏற்கனவே டீ பிசினஸ், ரியல் எஸ்டேட்டில் முதலீடு என மற்ற தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வரும் நயன்தாரா புதிதாக டாக்ஸி பிசினஸையும் ஆரம்பிக்க போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில்
சென்னை, சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்த நடிகை நயன்தாரா தங்களது புதிய காருக்கு பூஜை போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஷாருக்கானின் பதான் பட அறிவிப்பு வெளியாகி விட்ட நிலையில், அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடித்து வரும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.