வாரே வா. விக்கி கையில் நயன்.. நயன் கையில் சர்வதேச விருது.. இதுக்கு மேல என்ன வேணும்!

சென்னை: கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த முதல் சர்வதேச விருதுடன் அதன் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொடுத்துள்ள க்யூட் போஸ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் திரைப்படம் ஏகப்பட்ட சர்வதேச விருது விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், அந்த படத்திற்கு சர்வதேச விருதான டைகர் விருது கிடைத்திருக்கிறது.

இணந்து தயாரிப்பு

இணந்து தயாரிப்பு

ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள படம் கூழாங்கல். இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படம் சர்வதேச விழாக்களில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

டைகர் விருது

டைகர் விருது

ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச சினிமா விழாவில் போட்டியிட்ட கூழாங்கல் திரைப்படத்திற்கு டைகர் விருது கிடைத்துள்ளது. தற்போது அந்த மகிழ்ச்சியை தனது காதலியான நடிகை நயன்தாராவுடன் கொண்டாடி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நயன் கையில் விருது

நயன் கையில் விருது

நடிகை நயன்தாராவின் கைகளில் டைகர் விருதை கொடுத்து விட்டு, நயன்தாராவை தனது கைக்குள் வைத்துக் கொண்டபடி இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் நானும் ரவுடி தான் பட இயக்குநர்.

காதல் சிம்பள்

காதல் சிம்பள்

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Wikki official என தனது பெயரை குறிப்பிட்டுள்ளார். அதன் முதல் எழுத்தான W மற்றும் நயன்தாராவின் முதல் எழுத்தான N சேர்த்து WN சேர்ந்து இருக்கும் காதல் சிம்பளை தங்களது தயாரிப்பு அலுவலகத்தில் வைத்துள்ளனர். அந்த பேக்ட்ராப்பில் தான் இந்த போட்டோவை எடுத்துள்ளனர்.

செம ஹாப்பி

செம ஹாப்பி

இருவரும் இணைந்து தயாரித்த முதல் படமே சர்வதேச அரங்கில் கலக்கி முதல் விருதையும் பெற்று வந்திருப்பதை அறிந்த இருவரும் சந்தோஷத்துடன் அந்த விருதுடன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. எங்கே அந்த படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் ராஜை காணோமே என யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக தனது கேப்ஷனில் தெளிவாக அவர் குறித்து விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ரோமானியாவில் இயக்குநர்

ரோமானியாவில் இயக்குநர்

ரோட்டர்டாமில் டைகர் விருதை வாங்கி கொரியர் செய்து விட்ட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் அடுத்ததாக ரோமானியாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் தனது கூழாங்கல் திரைப்படத்தை வெளியிட்டு அடுத்த விருதை அள்ளும் முயற்சியில் உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறக்கப் போகுதா

குழந்தை பிறக்கப் போகுதா

டைகர் விருதுடன் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நாங்க கூட உங்க இரண்டு பேருக்கும் குழந்தை பிறக்கப் போகுதுன்னு தான் இப்படி போட்டோ போட்டு சொல்றீங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டோம் என கலாய்த்து வருகின்றனர்.

சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க

சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க

மேலும் சில ரசிகர்கள் சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க ப்ரோ என்றும் எப்போ கல்யாண சேதி சொல்வீங்க என்றும் கேள்விகளை கமெண்ட் பக்கத்தில் அதிகளவில் எழுப்பி வருகின்றனர். நடிகை நயன்தாரா ஏகப்பட்ட படங்களில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமண பேச்சுக்கு இடமில்லை என்றே தெரிகிறது.

வலிமை வரிகள்

வலிமை வரிகள்

தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாறி பாடல் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன்களை கடந்து சமூக வலைதளங்களில் இமாலய சாதனை படைத்துள்ளது. அந்த பாடலின் வரிகளை எழுதிய விக்னேஷ் சிவனுக்கு தல ரசிகர்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சுதந்திர தினத்தில் அறிவிப்பு

சுதந்திர தினத்தில் அறிவிப்பு

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் சுதந்திர தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி நயன் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X