துபாயில் அஜித்தை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. ஒரு வேலை அதுக்காக இருக்குமோ!

சென்னை: துபாயில் 24H சீரிஸ் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். ஜனவரி 10ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடந்த இந்த போட்டியில், 25 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பந்தயத்தில், அவரது அணி 992 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது. துபாயில் இந்த நிகழ்ச்சி நடந்த போது நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன் அவரை சந்தித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது அதன் பிறகு அவர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. 'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. அதற்கு காரணம், விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை இதனால், அவர் அந்த படத்தை கைவிட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின் தான் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியானது. தனது கணவரின் படத்தில் அஜித் நடிக்காததால், நயன்தாரா அஜித் மீது கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

Ajith Kumar Nayanthara

விக்னேஷ் சிவன்: ஆனால், விக்னேஷ்சிவன், அஜித் குமார் படம் கை தழுவி போன பின், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட வேலையை ஆரம்பித்தார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தயாராகிவிட்டது. இதையடுத்து தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை அதுக்காக இருக்குமோ: இந்நிலையில், நடிகர் அஜர் துபாயில் 24H சீரிஸ் போட்யில் கலந்து கொண்ட போது, நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நயன்தாராவை பார்த்த அஜித், இருவரும் கட்டி அணைத்துள்ளார்.தற்போது இந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு தனது கணவருக்கு வாய்ப்பு கேட்டு போய் இருப்பார் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X