Nayanthara:அடங்காத விக்கி.. எப்போதும் செம ரொமான்ஸ்.. இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!
சென்னை: நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படம்.?
போடா போடி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் உள்ளார்.

நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
உயிர்/உலகம்: பல ஆண்டுகளாக காதல் ஜோடியாக சுற்றிக்கொண்டு இருந்த இவர்கள் கடந்தஆண்டு ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் இருவீட்டாரின சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான நான்கு மாதத்திலேயே இருவருக்கும் வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயரிட்டுள்ளனர்.

இன்ஸ்டாவில் என்ட்ரி: சமூக வலைத்தளப் பக்கத்தில் தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் போட்டோவை ஷேர் செய்து மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார். நயன்தாரா இன்ஸ்டாவில் இணைந்த சில நாட்களிலேயே அவரை 2.5 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், வெறும் 20 பேரை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார்.
அடங்காத விக்கி: இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி நயன்தாராவை கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடங்காத விக்கி.. எப்போதும் செம ரொமான்ஸ்தான என விதவிதமான கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் நயன்: கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என மாஸ் காட்டி வந்த நடிகை நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். செப்டம்ர் 7ந் தேதி வெளியானத் திரைப்படம் உலகம் ழுழுவதும் 1000 ஆயிரம் கோடியை வசூலித்து நயன்தாராவின் சம்பளத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது நயன்தாரா நடிப்பில் ஜெயம்ரவியுடன் ஜோடி போட்டு இறைவன் படத்தில் நடித்துத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











