கேரளாவில் நயன்தாரா.. புதுசா ப்ரெண்ட்சோட சேர்ந்து என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!

கொச்சி : நடிகை நயன்தாரா திருமணம் முடிந்து தற்போது கணவர் விக்னேஷ் சிவனுடன் கேரளாவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

நயன்தாராவின் அம்மா அவருடைய திருமணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துக் கொள்ளவில்லை.

நயன் -விக்கி திருமணம்

நயன் -விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வின் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஷாருக்கான் பங்கேற்பு

ஷாருக்கான் பங்கேற்பு

மேலும் இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். இயக்குநர் அட்லி, அவரது அடுத்தப்படத்தின் நாயகன் ஷாருக்கானுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டிடி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த திருமணத்தில் திரளாக கலந்துக் கொண்டனர்.

கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள்

கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள்

சிறப்பான பாரம்பரியம் மற்றும் நவீனம் கலந்த உடையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காணப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளை நயன்தாரா அணிந்திருந்தார். அவரது திருமண புடவையும் சிறப்பான வடிவமைப்புடன் காணப்பட்டது. தேவதையாக ஜொலித்தார் நயன்தாரா.

திருப்பதி பயணம்

திருப்பதி பயணம்

இந்த திருமணத்தை அடுத்து உடனடியாக திருப்பதிக்கு சென்றது இந்த ஜோடி. முன்னதாக திருமணத்தை திருப்பதியில் நடத்த திட்டமிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நயன்தாரா வெட்கம்

நயன்தாரா வெட்கம்

தங்களுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக வெட்கத்துடன் தெரிவித்தார் நயன்தாரா. தொடர்ந்து மீடியாவின் சப்போர்ட் தங்களுக்கு தேவை என்றும் இருவரும் இணைந்து தெரிவித்தனர். இதற்கு ஏற்ப இருவரும் ஹனிமூனுக்குக் கூட போகாமல் உடனடியாக தங்களது வேலைகளில் இணையவுள்ளனர்.

நயன்தாரா ஓ2 படம் வெளியீடு

நயன்தாரா ஓ2 படம் வெளியீடு

இதனிடையே நேற்றைய தினம் நயன்தாராவின் ஓ2 படம் ரிலீசாகியுள்ளது. சிறப்பான கமெண்ட்களை இந்தப்படம் பெற்றுள்ளது. தன்னுடைய மகனுக்காக போராடும் இளம் தாயின் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இனிமேல் மற்ற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் அவர் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுவீட்டிற்கு சென்ற ஜோடி

மறுவீட்டிற்கு சென்ற ஜோடி

இந்நிலையில் திருமணம் முடிந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மறுவீட்டிற்காக கொச்சியில் உள்ள நயன்தாராவின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர். நயன்தாரா திருமணத்தில் அவரது தாய் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்கவில்லை.

உற்சாக புகைப்படங்கள்

உற்சாக புகைப்படங்கள்

கொச்சி சென்றுள்ள அவர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் மற்றும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

உற்சாக புகைப்படங்கள்

கொச்சி சென்றுள்ள அவர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் மற்றும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

மேக்கப் இல்லாத லுக்

மேக்கப் இல்லாத லுக்

இந்தப் புகைப்படத்தில் நயன்தாரா சிம்பிளான உடையில் இயல்பாக காணப்படுகிறார். ஆனால் ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார். விக்னேஷ் சிவனும் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஸ்டைலாகவும் இயல்பாகவும் காணப்படுகிறார். மொத்தத்தில் துளியும் மேக்கப் இல்லாமலும் நயன்தாரா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X