நீயும் நானும் சேர்ந்து போகும் தூரமே.. நயன்தாராவை சும்மா வளைச்சு வளைச்சு ரசிக்கிறாரே விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அந்த போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் சாதாரண டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான டயானா மரியம் குரியன் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு உயிர் மற்றும் உலக் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்: சூப்பர் ஸ்டார் என்று இன்னும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை கொண்டாடி வருகின்றனர். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா மாயா, அறம், டோரா, நெற்றிக்கண், கனெக்ட், ஓ2, அன்னபூரணி உள்ளிட்ட பல படங்களில் கதையின் நாயகியாகவும் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.
கணவருடன் போட்டோஷூட்: எல்ஐசி படத்தில் விக்னேஷ் சிவன் பிஸியாக இருக்கும் இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது பிசினஸ் பணிகளில் அவரும் பிசியாக இருந்தார். புதிதாக அலுவலகம் ஒன்றை கட்டி வருவதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திடீரென போட்டோஷூட் ஒன்றை நயன்தாரா நடத்தி இருக்கிறார்.
மேக்கிங் வீடியோ: வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டியில் விக்னேஷ் சிவன் அழகாக நடந்து வர அவர் கூடவே லைட் லாவண்டர் நிற சேலையை அணிந்து கொண்டு, தலையில் கொண்டை போட்டு மல்லிகை பூ வைத்து கழுத்தில் நெக்லஸ் ஒன்றை அணிந்து கொண்டு நடிகை நயன்தாரா க்யூட்டான புன்னகையுடன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.
மனைவியை ரசிச்சு: போட்டோகிராஃபர் போட்டோக்களை எடுக்கிறாரே என விடாமல் தனது மனைவி நயன்தாராவை ரசிச்சு விக்னஷ் சிவனும் சில புகைப்படங்களை எடுக்கும் காட்சிகள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வீடியோவுக்கு பேக்ரவுண்ட் பாடலாக நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற "நீயும் நானும் போகும் தூரமே" பாடலைப் போட்டு மேலும் வீடியோவை அனிருத் இசையுடன் அழகாக மாற்றி உள்ளனர். இருவரும் இணைந்து ஏதாவது புதிய படத்தில் நடிக்கப் போகிறார்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











