டிசம்பரில் திருமதியாகும் நயன்.. குரூஸ் ஷிப்பில் திருமணம்.. தேதிகூட குறிச்சாச்சு?

சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைப்படும் அளவுக்கு தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளில், நயன்தாரா திருணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இருவரும் திருமண தேதியை முடிவு செய்வதில் தீவிரம் காட்டி வந்தனர். தற்போது இவர்களது திருமண தேதி முடிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பரில் திருமணம்

டிசம்பரில் திருமணம்

வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் என தெரிகிறது. 25ம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழா என்பதால் அந்த நாளை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குரூஸ் ஷிப்பில் திருமணம்

குரூஸ் ஷிப்பில் திருமணம்

சமீபகாலமாக பாலிவுட்டில் முன்னணியில் உள்ள நடிகைகள் சிலர் வெளிநாட்டில் திருமணம் செய்வதை வழக்கமாக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுடைய திருமணத்தை வெளிநாட்டில் வைத்து நடத்த திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு குரூஸ் ஷிப்பில் வைத்து இவர்களது திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விஐபிக்களுக்கு அழைப்பு

விஐபிக்களுக்கு அழைப்பு

இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்களாம். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. விரைவில் தங்களது திருமண தேதியை நயன் - விக்கி ஜோடி அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

நயன்தாரா தற்போது மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்துள்ள பிகில் தீபாவளிக்கு வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரஜினி, நயன்தாரா நடித்துள்ள தர்பார் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X