நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்.. திரையுலகில் இருந்து இந்த 3 பேருக்குத் தான் அனுமதியா?
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில், வரும் ஜூன் 9 தேதி திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதி ஆகி உள்ளது.
திருப்பதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமணம் கடைசி நேரத்தில் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருமணத்தில் சினிமா துறையில் இருந்து வெறும் 3 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

திருப்பதியில் இல்லை
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அடிக்கடி திருப்பதிக்கு விசிட் அடித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் தான் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகி உள்ள ஒரு டிஜிட்டல் இன்விடேஷனில் அவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற போவதாக குறிப்பிடப்பட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

எளிய முறையில்
ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் சூழ்ந்து கொண்டு பிரம்மாண்டமான முறையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திருமணமாக நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், எளிய முறையில் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக இந்த திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். மீடியாக்களுக்கும் அனுமதி கிடையாதாம்.

3 பேருக்கு மட்டும் அழைப்பு
இந்நிலையில், திரைத்துறையை சார்ந்த மூன்று பேருக்கு மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட மூன்று சினிமா பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியான நிலையில், பலரும் அப்செட் ஆகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

யார் அந்த மூவர்
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுக்கு மட்டுமே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூன் 9ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர்.

சமந்தா வருவாரா
காஷ்மீரில் விஜய தேவரகொண்டாவின் குஷி படத்தில் நடித்து வரும் நடிகை சமந்தா இந்த திருமணத்துக்கு வருவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி 66 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த சமந்தா நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











