காளிகாம்பாள் கோயிலில் சூப்பர் தரிசனம்.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்த நயன்தாரா!

சென்னை: காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது, அங்கே வந்த சென்னையின் புது மேயர் பிரியா ராஜனை இருவரும் சந்தித்த நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை நயன்தாரா ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் நயன்தாரா

சென்னையில் நயன்தாரா

ஷாருக்கானின் படப்பிடிப்பு தாமதமாகி வரும் நிலையில், சமீபத்தில் இயக்குநர் அட்லி சென்னைக்கு திரும்பிய நிலையில், நடிகை நயன்தாராவும் தற்போது சென்னையில் தான் அதிகமாக தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என தெரிகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்கு இங்கே தான் இருப்பார் என தெரிகிறது.

பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில்

பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில்

சமீபத்தில் புதிதாக வாங்கிய இனோவா காருக்கு பூஜை போட சென்னையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் விசிட் அடித்து சாமி தரிசனம் செய்திருந்தார். மேலும், சென்னையில் உள்ள பல முக்கிய கோயில்களுக்கு வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்து வருவதாக தவகல்கள் வெளியாகி உள்ளன.

காளிகாம்பாள் கோயிலில்

காளிகாம்பாள் கோயிலில்

மூக்குத்தி அம்மனாக நடித்த நயன்தாரா அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே விரதமிருந்து பல அம்மன் கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்து வந்தார். இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சென்னை மேயருடன் சந்திப்பு

சென்னை மேயருடன் சந்திப்பு

அதே நேரம் சென்னையின் புது மேயராக தேர்வாகி உள்ள பிரியா ராஜனும் காளிகாம்பாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரியா ராஜனை சந்தித்து பேசினர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

புரமோஷனுக்கு வருவாரா

புரமோஷனுக்கு வருவாரா

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்திற்காக விஜய் டிவியில் டிடியுடன் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா தனக்கும் தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட ரகசியத்தை போட்டு உடைத்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் விஜய் டிவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X