காதலர் தினத்தன்று.. நயன்தாரா - விக்னேஷ் சிவன்... "அதை" ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்!
சென்னை : கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் அது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான். தனிப்பட்ட வாழ்க்கையிலும் இணைய உள்ள இந்த ஜோடி, தொழிலிலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கூழாங்கல் படம், சர்வதேச திரைப்பட திருவிழாவில் டைகர் விருதினை வென்றது. டைகர் விருது பெரும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை கூழாங்கல் படம் பெற்றுள்ளது.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்
இவர்கள் அடுத்ததாக தயாரித்து வரும் ராக்கி, நெற்றி கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அடுத்தடுத்த படங்களால் பிஸியாக இருக்கும் இந்த ஜோடி காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

எப்போ கல்யாணம்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் இவர்களின் கல்யாணம் எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது.

காதலர் தின பிளான்
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த படம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும் விக்னேஷ் சிவன், காதலர் தினத்தில் மிகப் பெரிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்
செவன் க்ரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்ற 3 தென்னிந்திய முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











