நடுரோட்டில் நயன்தாராவுக்கு நச்சுனு இச் கொடுத்த இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை : சமீப காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு ஜோடி என்றால் அது இந்த நானும் ரவுடிதான் ஜோடி தான்.
Recommended Video
இவர்கள் ஜோடியாக அவ்வப்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டாலும் அந்த புகைப்படங்களை பலரும் வைரல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவராலும் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நடிகர்கள்
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன், பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார்.

இணைந்து
இந்த நிலையில் இவர் இயக்கிய சூப்பர் ஹிட் படமான நானும் ரவுடிதான் படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணி ஆற்றினார். அந்த படத்தில் அமைக்கப்பட்டிருந்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கதாபாத்திரங்கள் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டுக்களை பெற்று வந்தது.

கதாபாத்திரத்தில்
இந்த படத்தில் மிகப் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொண்டு டம்மியான ரவுடியாக வலம் வரும் விஜய்சேதுபதி மற்றும் காது கேட்காத கதாபாத்திரத்தில் நயன்தாரா என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் இருவரும் நடித்து கலக்கி இருப்பார்கள். இந்த படத்தில் இவர்களது நடிப்பு மிகவும் பேசப்பட்ட நிலையில், இந்த படம் வெற்றி அடைந்ததற்கு மிகப்பெரிய காரணம் படத்தில் வரும் காமெடி காட்சிகள்.

வயிறு குலுங்க
இப்படம் தொடங்கியது முதல் கடைசிவரை எண்ணற்ற காமெடி காட்சிகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் நானும் ரவுடிதான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாகி திரையில் பல மாதங்களாக ஓடி மிகப் பெரிய வெற்றி கண்டது. மேலும் இந்த படம் பல மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

வெற்றி
இவ்வாறு இவர்கள் மூவரும் இணைந்த முதல்படமே வெற்றியாக கைகூடிய நிலையில், இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் கதாநாயகி
நயன்தாராவும் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியபோது இருவரும் காதல் வயப்பட்டு இன்றுவரை அனைவரும் பொறாமைப்படும் காதலர்களாக உலகத்தை சுற்றி வருகின்றனர்.

இருவரும் முத்தமிடுமாறு
இந்நிலையில் காதலர்களான இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இவர்கள் இருவரும் முத்தமிடுமாறு இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோ
சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும்
கொரோனா தொற்று
இருக்கின்றது என்று பரவி வந்த வதந்தியை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக இவர்கள் இணைந்து க்யூட்டான ஒரு வீடியோவுக்கு குழந்தை போல மாறி நடனம் ஆடி அனைவரையும் ரசிக்க வைத்தனர்.

முத்தமிட்டபடி
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தனது காதலியான நயன்தாராவை நெற்றியில் முத்தமிட்டபடி ஒரு தொங்கும் பாலத்தில் எடுத்த போட்டோ ஒன்றை சில மணி நேரத்திற்கு முன்பு அவர் வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே வைரலான இந்த புகைப்படத்தை பலரும் பார்த்து விட்டு லவ்லி கப்புல் என அவர்களை புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











