விரைவில் நெட்ஃபிளிக்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ...ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இருந்தாலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன், மிக பாதுகாப்பாக நடைபெற்றது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு மிக நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா,ஜோதிகா, ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், அனிருத், அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட சில விஐபி.,க்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது.இதனால் மற்றவர்கள் வீடியோ, போட்டோக்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் சில முக்கிய போட்டோக்களை மட்டும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

டாக்குமென்ட்ரியாக எடுக்கப்பட்ட திருமண வீடியோ

டாக்குமென்ட்ரியாக எடுக்கப்பட்ட திருமண வீடியோ

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஒரு டாக்குமென்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. அதோடு விக்னேஷ் சிவன் உடனான திருமணம் வரையிலாக நயன்தாராவின் வாழ்க்கையும் டாக்குமென்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமென்ட்ரியை டைரக்டர் கெளதம் மேனன் இயக்கி உள்ளார். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தான் இதை தயாரித்துள்ளது.

விரைவில் லவ் ஸ்டோரி க்ளிம்ப்ஸ்

விரைவில் லவ் ஸ்டோரி க்ளிம்ப்ஸ்

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நிலையில் இந்த டாக்குமென்ட்ரி, நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்களை விரைவில் வெளியிட உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத நயன்தாரா - விக்னேஷ் சிவனின் லவ் ஸ்டோரி டாக்குமென்ட்ரியின் க்ளிம்ப்ஸ் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு திருமண வீடியோ வெளியிடப்படும் தேதியும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா உண்மையான சூப்பர் ஸ்டார்

நயன்தாரா உண்மையான சூப்பர் ஸ்டார்

இது பற்றிய நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் சீரிஸ் ஹெட் தன்யா பாமி கூறுகையில், நயன்தாரா உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் திரையுலகில் பயணித்துள்ளார். எங்களின் அற்புதமான கிரியேடிவ் பார்ட்னர் டைரக்டர் கெளதம் வாசுதேவன் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் உடன, இனியும் எங்களால் காத்திருக்க முடியாது. விக்னேஷ் சிவனுடனான அழகான திருமணம், நயன்தாராவின் பயணத்தை காண எங்கள் உறுப்பினர்களும் ஆவலாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும்

சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும்

இது நிஜமாகவே சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும் என ட்விட்டரில் நயன்தாராவின் ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஒரு சூப்பர் வுமனின் அற்புதமான உணர்வுரீதியான கதையாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பலர் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த சந்தோஷத்தை வார்த்தையில் சொல்ல முடியாமல் எமோஜிக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

 நேற்று நோட்டீஸ், இன்று அறிவிப்பா

நேற்று நோட்டீஸ், இன்று அறிவிப்பா

திருமணத்தில் கலந்து கொண்ட விஐபி.,க்களின் போட்டோக்களை விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியிட்டதால் கடுப்பான நெட்ஃபிளிக்ஸ், திருமணத்திற்காக செலவு செய்த தொகை, ஒளிபரப்பு உரிமை தொகை உள்ளிட்ட மொத்த பணத்தையும் திருப்பி தர நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இந்த சமயத்தில் திருமண வீடியோக்களை விரைவில் வெளியிட உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது அனைவரையும் குழப்பமடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X