சிவப்பு நிற உடை.. அழகழகாய் அடுக்கடுக்காய் ஆபரணம்.. நயன் – விக்கி திருமண உடை சுவாரஸ்யம் !

சென்னை : விக்கி -நயன்தாரா திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்து மணமக்களை அழகுப்படுத்தி உள்ளது.

Recommended Video

Nayanthara Wedding | மணமக்களை வாழ்த்திய Celebrities and Families *Celebrity | Filmibeat Tamil

நயன்தாராவின் திருமண புகைப்படம் வெளியானதும், மணமக்களின் திருமண உடையை பார்த்து அனைவரும் வாய்பிளந்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண உடை பற்றிய சுவாரசியத் தகவலை இங்கே பார்க்கலாமா?

காஸ்ட்யூம் டிசைனர்

காஸ்ட்யூம் டிசைனர்

விக்கி -நயன்தாரா திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருக்கிறார்கள். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரம் செய்த காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்துள்ளனர்.

டிசைனர் சாரி

டிசைனர் சாரி

நடிகை நயன்தாரா என்ன மாதிரியான பட்டுப் புடவையை திருமணத்துக்கு எடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில், சிகப்பு நிறத்தில் ரோஜா பூ டிசைனர் புடவை அணிந்து தேவதைப்போல வந்தார். புடவையில் நீளத்தை அதிகரித்து அதை அப்படியே தலையில் முக்காடாக போட்டு இருந்தார். மேலும், இந்த டிசைனர் புடவை மிகவும் லைட்வெய்ட் கொண்டதாக இருந்தது. மேலும், பல்லுவின் பார்டரில் ஒரு ராயல் டச் நேர்த்தியாக தெரிந்தது.

லக்ஷ்மி டிசைன்

லக்ஷ்மி டிசைன்

கைகளை முழுவதுமாக மறைத்து முழுக்கை ஜாக்கெட் போட்டு இருந்தார். இதில் கைகளைச் சுற்றி லக்ஷ்மியின் உருவம் கொண்ட டிசைன் எம்பிராய்டரி செய்யப்பட்டு இருந்தது. அதிர்ஷ்டத்தை பிரதிபலிக்கும் வகையில் லக்ஷ்மிதேவியின் தோற்றம் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக காஸ்ட்யூம் டிசைனர் குழு தெரிவித்துள்ளது.

பச்சை நிற விலையுயர்ந்த ஆபரணம்

பச்சை நிற விலையுயர்ந்த ஆபரணம்

சிவப்பு நிற உடைக்கு காண்ட்ராஸ்டான பச்சை நிற விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை நயன்தாரா அணிந்து இருந்தார். இந்த நகைக்கும் சிகப்பு புடவைக்கும் ரிச் லுக்கை தந்தது. மேலும், நயன்தாராவுக்கு கூடுதல் அழகும் சேர்க்கும் வகையில் சிவப்பு நிற பொட்டு, ஒற்றை கல் மூக்குத்தி என மொத்தத்தில் அழகு பதுமையாக ஜொலித்தார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன் திருமண ஆடை விவரம்

விக்னேஷ் சிவன் திருமண ஆடை விவரம்

விக்னேஷ் சிவனின் திருமண உடையில் பாரம்பரியத் தன்மை கொண்டதாக இருந்தது. இதில் வேஷ்டி மற்றும் குர்தா மற்றும் சால்வை அணிந்து வந்தார். இவை அனைத்தும் ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவையாகும். சால்வையில் ‘ஏக் தார்' எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. இருவரும் வெள்ளை நிற மாலை அணிந்து பார்க்க அழகாக இருந்தனர். இருவரின் உடையை பார்த்து திரையுலகமே வாயை பிளந்துள்ளது.

பலாப்பழ பிரியாணி

பலாப்பழ பிரியாணி

திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் 3 நாட்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு இரவுக்கு 1. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்தில் பலாப்பழ பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா கறி, மிளகு ரசம், என 27 வகை உணவு திருமண விருந்தாக பரிமாறப்பட்டுள்ளது. மணமக்களுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X