விக்னேஷ் சிவன் கையை பிடித்தபடி.. செம ஸ்டைலாக வரும் நயன்தாரா.. வைரலாகும் போட்டோ!

By

சென்னை: நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகோர்த்தபடி விமான நிலையத்துக்கு வரும் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

நாயகிகளாக குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

கொரோனா பரவலுக்கு முன்பே இதன் ஷூட்டிங் தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டது.அடுத்த மாதம் தனிக் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிடும்படி ரஜினி கூறியிருந்தார். இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

கொரோனா பாதுகாப்பு

கொரோனா பாதுகாப்பு

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் கலந்து கொண்டார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாகக் கடைபிடித்து இதன் ஷூட்டிங்கை தொடங்கினர்.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இருந்தும் பட யூனிட்டில் உள்ள 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வழக்கம் போல, படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது இது தெரியவந்தது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தொற்று இல்லை

தொற்று இல்லை

ரஜினிகாந்துக்கும், மற்ற படக் குழுவினருக்கும் தொற்று இல்லை என்றாலும் ரஜினிகாந்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். மற்ற நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா நேற்று சென்னை திரும்பினார்.

கைகோர்த்தபடி

கைகோர்த்தபடி

காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி ஐதராபாத் விமான நிலையத்துக்கு இருவரும் ஒன்றாக வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்கிறாக அங்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை படமாக்கினார். அதை முடித்துவிட்டு நயன்தாராவுடன் நேற்று சென்னை திரும்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X