twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாடகைத்தாய் சர்ச்சை.. நாங்க எந்த விதியையும் மீறல.. ஆதாரங்களை சமர்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

    |

    சென்னை: வாடகைத்தாய் விவகாரத்தில் சரியான நெறிமுறையை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடைபிடித்தார்களா என்கிற கேள்வி எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு விளக்கம் அளித்துள்ளனர்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகி உள்ளதாக திடீரென விக்னேஷ் சிவன் போட்டோக்களுடன் பதிவிட்ட ட்வீட் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    ஜூன் 9ம் தேதி தானே ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களின் தலைமையில் திருமணம் செய்தனர், அதற்குள் எப்படி இரட்டைக் குழந்தைகள் என கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன.

    பூதாகரமாகும் வாடகைத்தாய் விவகாரம்...கூலாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நயன்தாரா!பூதாகரமாகும் வாடகைத்தாய் விவகாரம்...கூலாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நயன்தாரா!

    நயன்தாராவுக்கு ட்வின்ஸ்

    நயன்தாராவுக்கு ட்வின்ஸ்

    திருமணம் முடிந்த கையோடு இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், இருவருக்கும் எப்படி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. கண்டிப்பாக இருவரும் வாடகைத்தாய் முறையை தான் பயன்படுத்தி குழந்தைகளை பெற்றிருப்பார்கள் என்கிற முடிவுக்கே பலரும் வந்துவிட்டனர்.

    வாடகைத்தாய் முறையிலும் சிக்கல்

    வாடகைத்தாய் முறையிலும் சிக்கல்

    திருமணமான உடனே குழந்தைகளை வாடகைத்தாய் முறைப்படி பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான விதிமுறைகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுக்காமல் செய்திருந்தால் கண்டிப்பாக அதற்கான தண்டனை கிடைக்கும் என்று புகார்கள் கிளம்பின. உடனடியாக அரசு இதில் தலையிட்டு, அவர்களிடமே உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறிய நிலையில், தற்போது விசாரணை அதிகாரிகளிடம் ஆதாரங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் சமர்பித்துள்ளனர்.

    6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்

    6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்

    விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை இயக்குநர் விக்னேஷ்சிவன் - நயன்தாரா தம்பதியினர் சமர்பித்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் சமர்பித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் முறை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெளிவாக கூறியுள்ளனர்.

    சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

    சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி


    ஆனால், ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை பாதிக்காது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர். மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்தது என்றும்
    சமூகவலைதளங்களில் வெடித்த சர்சையில் எந்த உண்மையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

    English summary
    Nayanthara and Vignesh Shivan submit all Surrogacy and Register Marriage details to Govt Officials
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X