ஜோசியர் அட்வைஸ்.. அந்தக் கோயிலுக்குச் சென்று வந்த பிறகுதான் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணமா?

By

சென்னை: அந்த கோயிலுக்கு சென்று வந்த பிறகுதான் நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Nayanthara & Ramya Krishanan lose Crores of rupees

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்துவருகிறார்.

சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், சரத்குமாரின் ஐயா மூலம் தமிழில் அறிமுகமானார்.

சிம்புவுடன் காதல்

சிம்புவுடன் காதல்

இவருக்கும் நடிகர் சிலம்பரசனுக்கும், படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அப்போது வெளியாகின. சில மாதங்கள் தொடர்ந்த இவர்கள் காதல், திடீரென முறிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அப்போது இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு விஜய்யின் வில்லு படத்தில் நடித்தபோது, பிரபுதேவாவுடன் காதல் கொண்டார், நயன்தாரா.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், திடீரென்று காதல் உடைந்தது. இருவரும் பிரிந்தனர். பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக, நடிக்காமல் இருந்த நயன்தாரா, பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கினார்.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

இப்போது இவர்கள் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின்போது இருவரும் சில கோயில்களுக்கு சென்று வந்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இப்போது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் நயன்தாரா பற்றிய செய்தி அவ்வப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாராவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்தி பரவியது. இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்து, காட்டமாகப் பதிலளித்து இருந்தார்.

திருமண விஷயம்

திருமண விஷயம்

இந்நிலையில் ஜோசியர் ஆலோசனைப்படி திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் சென்று வந்தபிறகுதான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. லாக்டவுனுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அந்த கோயிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அங்கு சென்றுவந்த பின் தங்கள் திருமண விஷயம் பற்றி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வமாக யாரும் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X