மீண்டும் ஊர் சுற்ற கிளம்பிய …நயன்தாரா..விக்னேஷ் சிவன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Recommended Video

Nanyanthara Vacation! Vignesh Shivan Nayan Off to GOA | Filmibeat Tamil

இந்நிலையில் இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இணைகின்றனர் இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

எப்பொழுதுமே ஹாயாக ஊர் சுற்றி வரும் இந்த நட்சத்திர காதல் ஜோடி சமீப காலமாக லாக் டவுன் காரணத்தால் வீட்டில் முடங்கி இருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் ஊர் சுத்த கிளம்பிடாங்க.

ட்ரெண்டான கதைகளை

ட்ரெண்டான கதைகளை

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது உள்ள இளம் இயக்குநர்களில் ரசிகர்களுக்குப் பிடிக்கின்றவகையில் ட்ரெண்டான கதைகளை திரைப்படங்களாக எடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளார்.

நம்பிக்கைக்குரிய இயக்குனர்

நம்பிக்கைக்குரிய இயக்குனர்

அவ்வாறு இவர் இயக்கிய போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ள திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஹிட் அடித்து வந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நாடுகளுக்கு சுற்றித்திரிந்த

நாடுகளுக்கு சுற்றித்திரிந்த

இந்தநிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றிய போது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல், இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றித்திரிந்த அந்தப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

வெளிநாடுகளுக்கு பறப்பதை

வெளிநாடுகளுக்கு பறப்பதை

சூட்டிங் இருக்கின்றதோ இல்லையோ இந்த நட்சத்திர காதல் ஜோடிகள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறப்பதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தீவிரமாக பரவிய கொரானா நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் வீட்டிலேயே முடங்கினர்.

க்யூட்டான வீடியோ

க்யூட்டான வீடியோ

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கொரானா தொற்று இருக்கின்றது என சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் இணைந்து க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவும் பின் வைரலானது.

மீண்டும் ஊர் சுற்ற

மீண்டும் ஊர் சுற்ற

கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊர் சுற்ற கிளம்பியுள்ளனர். அதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்க இருக்கின்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒருவழியாக வெக்கேஷன் மூடுக்கு வந்தாச்சு, நிஜமாகவே இது ஒரு நீண்ட லாக்டவுன் தான் என புத்துணர்ச்சியுடன் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தந்து வரும் நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X