கல்யாணம் ஆகி 4 மாசம் தான் ஆகுது.. 2 ஹனிமூன் சுத்துனாங்க. அதுக்குள்ள நயன்தாராவுக்கு ட்வின்ஸ் எப்படி?

சென்னை: விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகி விட்டனர் என்கிற அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

ஜூன் மாதம் தானே மகாபலிபுரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது 4 மாதத்திற்குள் எப்படி 2 குழந்தைகள் பிறந்தது என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

முன்னதாக வாடகைத் தாய் மூலம் நயன்தாரா குழந்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறார் என வெளியான தகவல்கள் தற்போது உண்மையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நயன்தாராவுக்கு ட்வின்ஸ்

நயன்தாராவுக்கு ட்வின்ஸ்

லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகமே கொண்டாடி வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2 ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஷாக்கான ரசிகர்கள்

ஷாக்கான ரசிகர்கள்

தாய்லாந்து, ஸ்பெயின் என இரண்டு ஹனிமூன்கள் சென்று வருகின்றனர் என்று பார்த்தால், திடீரென குழந்தை பெற்று விட்டதாக கூறுகின்றனே இது எப்படி சாத்தியம் என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். விக்னேஷ் சிவன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர்.

ஒண்ணும் புரியல

ஒண்ணும் புரியல

எப்படி அதற்குள் நயன்தாராவுக்கு ட்வின்ஸ் குழந்தை பிறந்தது என புரியாமல் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். போன மாசம் வரை இருவரும் ரொமாண்டிக் செய்யும் போட்டோக்கள் வெளியாகின. நயன்தாரா கர்ப்பமாக இருந்தது போல ஒரு போட்டோ கூட வெளியாகவில்லையே, அப்புறம் எப்படி நயன்தாரா அம்மாவானார் என கேள்விகள் கிளம்பி உள்ளன.

வாடகைத்தாய் மூலமாகவா

வாடகைத்தாய் மூலமாகவா

நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என கூறப்பட்ட நிலையில், வாடகைத் தாய் மூலம் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார் என சில மாதங்களுக்கு முன்பாக தகவல்கள் கசிந்தன. அதெல்லாம் வதந்தி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுதான் உண்மையா? என இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கவின் வாழ்த்து

கவின் வாழ்த்து

விக்னேஷ் சிவன் ட்வீட் போட்ட உடனே நடிகர் கவின் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் உங்களுக்காவது எப்படின்னு தெரியுமா பாஸ் சொல்லுங்க என நயன்தாரா ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விக்னேஷ் சிவன், நயன் தயாரிப்பில் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார் கவின்.

4 மாசம் தான் ஆச்சு

4 மாசம் தான் ஆச்சு

கல்யாணம் ஆகி 4 மாசம் தான் ஆச்சு என ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா போல நயன்தாராவும் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதுபற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியுள்ள இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X