Don't Miss!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் காதலருடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா.. என்ன வேண்டுதலோ?
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு வெளிநாடுகளில் டூர் அடித்த நிலையில், தற்போது நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்று வேண்டுதல்களை செலுத்தி வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நயன்தாரா, சமந்தா காலில் விழுந்து கும்பிடும் விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர் ரிலீஸ்!

மீண்டும் புரபோஸ்
கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த காதலர் தினக் கொண்டாட்டத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம ஸ்பெஷலாக மீண்டும் புரபோஸ் செய்வது போல செய்து கொண்டாடினர். அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

டீசர் செம ஹிட்
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் யூடியூபில் பல மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டானது. அந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் காதலை சொல்லும் வசனம் அதிகப்படியான நபர்களால் டப்ஸ்மேஷ் செய்யப்பட்டு ரீல்களாக போடப்பட்டு வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணி கங்குலி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

துபாயில் நியூஇயர் செலிபிரேஷன்
புத்தாண்டு பண்டிகையை துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா அருகே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய இணையத்தில் அந்த புகைப்படங்கள் வேற லெவலில் டிரெண்டாகின. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தினர்.

பாலிவுட் வாய்ப்புகள்
அதேசமயம், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா மேலும், பல பாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா பாலிவுட்டிலும் கொடிகட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயிலில்
தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் காட் ஃபாதர் படத்தில் நடித்து வரும் நயன்தாரா கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயிலில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து டிரெண்டாகி வருகின்றன.

என்ன வேண்டுதலோ
இருவரும் திடீரென பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்வதை பழக்கமாக வைத்து வருகிறார் நயன்தாரா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.