கோவில் கோவிலாக சுற்றும் நயன், விக்னேஷ்... கோவிலில் சிறப்பான வழிபாடு!

சென்னை: கன்னியாகுமரி, திருச்செந்தூர் கோயில்களில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு நயன்தாரா வந்த செய்தியை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரை காண ஆர்வமுடன் காத்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் செய்து கொண்ட 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்கு தாயானார். இரட்டை ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.

Nayanthara and vignesh shivan visits Kanyakumari and Tiruchendur temple

நடிகை நயன்தாரா: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது குழந்தைகளோடு இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை வெளியிட்டு வருகிறார். அன்னையர் தினம் அன்று நயன்தாரா குழந்தைகளோடு கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

கணவருடன் வழிபாடு: இந்நிலையில் நடிகை நயன்தாரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், நேற்று பகவதியம்மன் கோயிலுக்கு கணவருடன் வந்த நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மேலும், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், சாமி தோப்பு தலைமை பதிக்கும் கணவருடன் சென்று தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் படம் வெளியான பிறகு நயன்தாரா, ஒவ்வொரு ஆண்டும் கன்னிபகவதியம்மன் கோயில் திருவிழா நாளில் வந்து பகவதியம்மனை வழிபட்டு வருகிறார்

திருச்செந்தூர் கோவில்: இதைத் தொடர்ந்து இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வழிபாடு செய்தார். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பான முறையில் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இந்த கோவிலுக்கு நயன்தாரா வந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, கோவில்களுக்கு வெளியே நடிகை நயன்தாராவை காண ரசிகர்கள் கூட்டமாக காத்திருந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X