திருப்பதியில் விக்னேஷ் சிவன், நயன்தாரா ரகசிய திருமணமா? டிரெண்டாகும் புதிய புகைப்படம்!

சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல்

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல்

2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிச்சயம் ஆகிடுச்சு

நிச்சயம் ஆகிடுச்சு

கடந்த ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்திற்காக விஜய் டிவியில் பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை நயன்தாரா கொடுத்திருந்தார். அப்போது, உங்களுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போ திருமணம் என டிடி கேட்க, இருவருக்கும் நிச்சயம் ஆகிடுச்சு என்கிற ரகசியத்தை போட்டு உடைத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நயன்தாரா. போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டுக்கு குடிபோன உடனே திருமணம் நடக்கும் என பேச்சுவார்த்தைகள் கிளம்பின.

திருப்பதியில் திடீர் திருமணமா

திருப்பதியில் திடீர் திருமணமா

இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதியில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்ததுமே நெட்டிசன்கள் திருப்பதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்டதாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், இருவரும் சாமி தரிசனம் செய்ய மட்டுமே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படம் ஓடணும் பெருமாளே

படம் ஓடணும் பெருமாளே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் நல்லா ஓடணும் பெருமாளே என இருவரும் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா தொடர்ந்து பல கோயில்களுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X