கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ தாமதம் ஏன்.. இதுதான் காரணம்!
சென்னை : திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ இன்னும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி,நயன்தாராவை வைத்து நானும் ரௌடிதான் என்ற படத்தை இயக்கிய போது நயன்தாராவை காதலிக்கத் தொடங்கினார்.
இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக விக்கியும்,நயனும் வலம் வந்தனர்.

நயன்தாரா,விக்னேஷ் சிவன்
பல ஆண்டுகளாக காதலர்களாகவே இருந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரன்டில் திருமணம் செய்து கொண்டனர். கடற்கரையோரம் திறந்த வெளியில் அமைந்திருந்த ரெஸ்டாரன்டில் விதவிதமான வண்ண விலங்குகளாலும், ரோஜாப்பூ மலர் அலங்காரம், வாட்டர் பால்ஸ் என அரங்கமே ஜொலி ஜொலித்தது.

சிவப்பு புடவையில்
நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கு ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்டரில் வரலாற்று சிறப்புமிக்க கொய்ராலா அச்சிடப்பட்டிருந்தது. கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அதே போல விக்னேஷ் பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தார்.

பிரம்மாண்டமாக நடந்த திருமணம்
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமாவில் முக்கியமான 30 விவிஜபிக்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான்,விஜய்சேதுபதி, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரைவில் வீடியோ
நயன்தாராவின் திருமண வீடியோ வெளியிட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதால், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை. ஒரு சில போட்டோக்களை மட்டுமே விக்கி வெளியிட்டு இருந்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம்,நயன்தாரா திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. ஆனால் திருமணமாகி 6 மாதங்கள் ஆன போதும் இன்னும் வீடியோ வெளியாகாததால், அந்த வீடியோ என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

தாமதத்திற்கு காரணம் இதுதான்
இந்நிலையில், திருமண வீடியோவை டாக்குமெண்ட்ரியை தயாரிப்பதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவர் அதனை படமாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் தான் விரும்பும் தரத்திற்கு போஸ்ட் புரொடக்ஷனை முடிக்க இன்னும் ஒரு மாதம் என்று கூறப்படுகிறது. இதனால் திருமண வீடியோ மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











