Nayanthara And Vignesh Shivan - தஞ்சாவூரில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. காரணம் தெரியுமா?

சென்னை: Nayanthara And Vignesh Shivan (நயன்தாரா, விக்னேஷ் சிவன்) குல தெய்வ வழிபாடு செய்வதற்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தஞ்சை மாவட்ட பாபநாசத்திற்கு சென்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்

விக்னேஷ் சிவனுடன் திருமணம்

தனது கேரியர் உச்சத்தில் இருந்தபோது தனிப்பட்ட பிரச்னைகளை சந்தித்து அதற்காக கடும் விமர்சனங்களை பெற்றவர் நயன்தாரா. சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த ரீ எண்ட்ரி கொடுத்தார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா; கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணமும் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்தது.

வாடகை தாய் மூலம் குழந்தைகள்

வாடகை தாய் மூலம் குழந்தைகள்

திருமணம் ஆன சில மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது நயன் - விக்கி ஜோடி. ஆனால் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றதில் இருவரும் விதிகளை மீறியிருக்கின்றனர் என சர்ச்சை எழ; அதுகுறித்த விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என்றும்; எந்த விதியையும் மீறவில்லை என்றும் தெரியவந்தது.

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன் - விக்னேஷ் சிவன்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன் - விக்னேஷ் சிவன்

இந்தச் சூழலில் தங்களது இரண்டு குழந்தைகளின் பெயர்களை சமீபத்தில் அறிவித்தனர். அதன்படி ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் மற்றொரு ஆண் குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் N என்பது உலகின் சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

குழந்தைகளுடன் குல தெய்வ வழிபாடு

குழந்தைகளுடன் குல தெய்வ வழிபாடு

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் குல தெய்வ வழிபாடு செய்ய தஞ்சைக்கு வந்தனர். விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேல்வளத்தூரில் இருக்கும் ஆற்றங்கரையோரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகும். எனவே இருவரும் தங்களது குழந்தைகளுடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

நயனின் ஜவான், விக்னேஷ் சிவனின் அடுத்த படம்

நயனின் ஜவான், விக்னேஷ் சிவனின் அடுத்த படம்

நயன்தாரா தற்போது அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்துவருகிறார். படத்தில் அவருக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62விலிருந்து கழற்றிவிடப்பட்ட விக்னேஷ் சிவன் அடுத்ததால் லவ் டுடே படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்குகிறார் என்றும் அதில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X