ஜோடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரவுடி கப்புள்... வைரலாகும் ஃபோட்டோ!
சென்னை : நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தொழிலிலும் பார்ட்னராக இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் க்யூட் கப்புளாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியாக கொரோனா தடுப்பு ஊசியும் போட்டுக் கொண்ட புகைப்படம் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆழமான காதல்
போடா போடி படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் அதை தொடர்ந்து இயக்கிய நானும் ரவுடிதான் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா லீட் ரோலில் நடித்திருக்க இந்த படத்தில் பணியாற்றும்போது நயன்தாராவுடன் ஆழமான காதல் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கையில் பார்ட்னராக
இந்த காதல் விவகாரத்தை அறிந்த ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர இந்த ரவுடி காதல் புறாக்கள் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிக விரைவிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் பார்ட்னராக இருக்கும் இவர்கள் தொழில் ரீதியாகவும் ஒன்றாக இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டும் வருகின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து அதே கூட்டணி தற்போது மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இணைந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து சமந்தா மற்றுமொரு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Recommended Video

ரசிகர்களுக்கும் அறிவுரை
இவ்வாறு எப்போதுமே கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக விளங்கி வரும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் தற்பொழுது குரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் கொடூரமாக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பலரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதோடு தங்களுடைய ரசிகர்களையும் போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











